3வது விக்கெட்டை வீழ்த்த முடியாமல் முக்கிய இந்திய அணி!! கேப்டன் கோலியின் புது முயற்சி.. முக்கியமான விக்கெட்டை வீழ்த்தி பிரேக் கொடுத்த ஜடேஜா

By karthikeyan VFirst Published Jan 12, 2019, 9:53 AM IST
Highlights

10 ஓவருக்கு உள்ளாகவே 2 விக்கெட்டுகளை இழந்தது ஆஸ்திரேலிய அணி. அதன்பிறகு கவாஜாவுடன் ஷான் மார்ஷ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இந்திய அணியின் பவுலிங்கை நிதானமாக கையாண்டதோடு ரன்களையும் சேர்த்தது. 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் ஒருநாள் போட்டி சிட்னியில் நடந்துவருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. 

தொடக்க வீரர்களாக கேப்டன் ஃபின்ச்சும் அலெக்ஸ் கேரியும் களமிறங்கினர். மூன்றாவது ஓவரிலேயே ஃபின்ச்சை கிளீன் போல்டாக்கி அனுப்பினார் புவனேஷ்வர் குமார். இது புவனேஷ்வர் குமாரின் 100வது ஒருநாள் விக்கெட். 

இதையடுத்து கேரியுடன் கவாஜா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக ரன்களை சேர்த்து வந்தது. 10வது ஓவரை வீச சைனாமேன் குல்தீப்பை அழைத்தார் கேப்டன் கோலி. குல்தீப் யாதவ் வீசிய முதல் ஓவரிலேயே கேரியை வீழ்த்தினார். 

10 ஓவருக்கு உள்ளாகவே 2 விக்கெட்டுகளை இழந்தது ஆஸ்திரேலிய அணி. அதன்பிறகு கவாஜாவுடன் ஷான் மார்ஷ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இந்திய அணியின் பவுலிங்கை நிதானமாக கையாண்டதோடு ரன்களையும் சேர்த்தது. ஜடேஜாவும் குல்தீப்பும் மாறி மாறி வீச, கவாஜாவும் ஷான் மார்ஷும் அவர்களை திறமையாக எதிர்கொண்டு ஆடினர். இதையடுத்து பரிசோதனை முயற்சியாக அம்பாதி ராயுடுவை பந்துவீச அழைத்தார் கேப்டன் கோலி.

22வது ஓவரை தனது முதல் ஓவராக வீசிய ராயுடு அந்த ஓவரை நன்றாக வீசினார். அந்த ஓவரில் 3 ரன்கள் மட்டுமே கொடுத்தார். அதன்பிறகு ராயுடு வீசிய 24வது ஓவரில் கவாஜா 2 பவுண்டரிகளை அடித்தார். அந்த ஓவரில் 10 ரன்கள் எடுக்கப்பட்டன. அதன்பிறகு ராயுடுவிடம் கோலி பந்தை கொடுக்கவில்லை. பரிசோதனை முயற்சி பலனளிக்கவில்லை. 

இதையடுத்து தொடர்ந்து சிறப்பாக ஆடிவந்த கவாஜா, அரைசதம் கடந்தார். கவாஜா - ஷான் மார்ஷ் ஜோடியை பிரிக்க முடியாமல் இந்திய பவுலர்கள் திணறிய நிலையில், பிரேக் கொடுத்தார் ஜடேஜா. 59 ரன்கள் அடித்திருந்த கவாஜா, ஜடேஜாவின் பந்தில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார். கவாஜா - ஷான் மார்ஷ் ஜோடி 3வது விக்கெட்டுக்கு 92 ரன்களை குவித்தது. 41 ரன்களில் இரண்டாவது விக்கெட்டை இழந்த ஆஸ்திரேலிய அணி, 133 ரன்களுக்குத்தான் 3வது விக்கெட்டாக கவாஜாவை இழந்தது. 
 

click me!