ஒலிம்பிக் 2024 தொடரில் பங்கேற்கும் இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு உதவும் வகையில் இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ரூ.8.5 கோடி நிதி உதவி அளிப்பதாக அறிவித்துள்ளார்.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் 2024 ஒலிம்பிக் தொடரானது வரும் 26 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இந்த தொடரில் மொத்தமாக 32 விளையாட்டுகளில் 329 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படுகிறது. பல்வேறு நாடுகளிலிருந்து 10,714 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் இடம் பெற்று விளையாடுகின்றனர். ஆனால், இந்தியா சார்பில் வெறும் 16 போட்டிகளில் மட்டுமே 70 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் உள்பட மொத்தமாக 117 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
undefined
இவர்களில் சந்தோஷ் தமிழரசன், சுபா வெங்கடேசன் (திருச்சி), வித்யா ராமராஜ் (கோயம்புத்தூர்), பிரவீன் சித்திரவேல், ராஜேஷ் ரமேஷ் ஆகிய தமிழக வீரர், வீராங்கனைகள் உள்பட 13 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மாநிலம் வாரியாக ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் விளையாட்டு வீரர், வீர்ரகள்:
பாரிஸ் ஒலிம்பிக்கில் அதிக விளையாட்டு வீரர்களை களமிக்கும் மாநிலமாக ஹரியானா (24) திகழ்கிறது. பஞ்சாப் (19), தமிழ்நாடு (13), கர்நாடகா (7), உத்திரபிரதேசம் (7), கேரளா (6), மகாராஷ்டிரா (5), டெல்லி (4), ஆந்திரபிரதேசம் (4), தெலங்கானா (4), உத்தரகாண்ட் (4), மேற்கு வங்காளம் (3), மத்தியபிரதேசம் (2), மணிப்பூர் (2), ஒரிசா (2), ராஜஸ்தான் (2), குஜராத் (2), சண்டிகர் (2), பீகார் (1), அசாம் (1), சிக்கிம் (1), ஜார்க்கண்ட் (1), கோவா (1).
இந்த நிலையில் தான் இந்த பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் பங்கேற்கும் இந்திய விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு உதவும் வகையில் இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு ரூ.8.5 கோடி நிதி உதவி அளிப்பதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்துள்ளார். ஏற்கனவே ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற இந்திய விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கு மத்திய அரசு சார்பில் ரூ.470 நிதியுதவி அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.