நிதானமாக ஆடி ரன்கள் குவிக்கும் வங்கதேசம்: உணவு இடைவேளையின் போது 119 ரன்கள் சேர்ப்பு!

By Rsiva kumarFirst Published Dec 17, 2022, 11:50 AM IST
Highlights

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2ஆவது இன்னிங்ஸில் வங்கதேச வீரர்கள் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்திய அணி வீரர்கள் வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி தற்போது நடந்து வருகிறது. இதில், இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் செய்தது.

இந்திய அணி:

ஷுப்மன் கில், கேஎல் ராகுல் (கேப்டன்), புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), அக்ஸர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், குல்தீப் யாதவ், உமேஷ் யாதவ், முகமது சிராஜ்.

வங்கதேச அணி:

ஜாகிர் ஹசன், நஜ்முல் ஹுசைன் ஷாண்டோ, லிட்டன் தாஸ், ஷகிப் அல் ஹசன் (கேப்டன்), முஷ்ஃபிகுர் ரஹீம், யாசிர் அலி, நூருல் ஹசன் (விக்கெட் கீப்பர்), மெஹிடி ஹசன் மிராஸ்,  டைஜுல் இஸ்லாம், காலித் அகமது, எபடாட் ஹுசைன்.

முதல் இன்னிங்ஸில் 404 ரன்கள் சேர்த்தது. இதே போன்று வங்கதேச அணி 150 ரன்கள் மட்டுமே எடுத்து, 254 ரன்கள் பின் தங்கியிருந்தது. இதையடுத்து, 2ஆவது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணியில் சுபம்ன் கில், புஜாரா ஆகியோர் அடுத்தடுத்து சதம் அடிக்க இந்திய அணி 258 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. இதன் மூலம் வங்கதேச அணிக்கு 513 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

2வது இன்னிங்ஸில் கில், புஜாரா சதம்.. வங்கதேசத்திற்கு மெகா இலக்கை நிர்ணயித்து வெற்றியை உறுதி செய்த இந்தியா

கடின இலக்கை கருத்தில் கொண்டு களமிறங்கிய நஜ்முல் ஹுசைன் ஷாண்டோ மற்றும் ஜாகிர் ஹசன் ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அவ்வப்போது பவுண்டரிகளும் விரட்டி வருகின்றனர். இருவரும் நிதானமாக ஆடி அரைசதம் கடந்தனர். உணவு இடைவேளையின் போது நஜ்முல் 143 பந்துகளில் 7 பவுண்டர்களுடன் 64 ரன்களும், ஜாகிர் ஹசன் 109 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 55 ரன்களும் சேர்த்துள்ளனர்.


FIFA World Cup 2022: கண்ணீரும் கம்பலையுமாக வெளியேறிய 3 அணிகள்.. முப்பெரும் தோல்விகளும் காரணங்களும்
 

தற்போது உணவு இடைவேளையின் போது வங்கதேச அணி விக்கெட் இழப்பின்றி 119 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும், ஒன்றரை நாட்கள் இருக்கும் நிலையில், அதிரடியாக ஆடி ரன்கள் சேர்த்தால் மட்டுமே வங்கதேச அணியால் வெற்றி பெற முடியும். இந்திய அணி 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றினால் வெற்றி பெறலாம். இதே நிலையில், வங்கதேச வீர்ர்கள் விளையாடினால்  இந்த போட்டி டிராவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!