44 வருஷத்துல இதுதான் மோசமான ஸ்கோர்.. வெறும் 43 ரன்னில் ஆல் அவுட்டாகிய வங்கதேசம்

First Published Jul 5, 2018, 7:35 AM IST
Highlights
bangladesh all out for 43 in an innings in test match against windies


வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி, வெறும் 43 ரன்களில் ஆல் அவுட்டாகியது.

வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள வங்கதேச அணி, 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் ஆடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி தொடங்கி நடந்துவருகிறது. 

இந்த போட்டியில் முதலில் வங்கதேச அணி பேட்டிங் செய்தது. வங்கதேச அணியில் ஒரு வீரரும் சோபிக்கவில்லை. தொடக்க வீரர் லிட்டன் தாஸ் மட்டும் 25 ரன்கள் எடுத்தார். அவரை தவிர மற்றவர்கள் அனைவரும் ஒற்றை இலக்கங்களிலும் டக் அவுட் ஆகியும் வெளியேறினர். 

இக்பால்(4), ஹாக்(1), முஷ்ஃபிகர் ரஹீம்(0), ஷாகிப் அல் ஹாசன்(0), மஹ்முதுல்லா(0), நூருல் ஹசன்(4) என அனைவரும் அடுத்தடுத்து வெளியேறினர். தொடர் விக்கெட் சரிவால் வங்கதேச அணி வெறும் 43 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. 

கடைசி 44 ஆண்டுகளில் டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸில் எடுக்கப்பட்ட குறைவான ஸ்கோர் இதுதான். 1974ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 42 ரன்களுக்கு சுருண்டது. வங்கதேசம் எடுத்த 43 ரன்களை விட குறைந்த டெஸ்ட் ஸ்கோர் எடுக்கப்பட்டிருந்தாலும் கடந்த 44 ஆண்டுகளில் பார்த்தால், இதுதான் குறைவான ஸ்கோர். 

டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸில் எடுக்கப்பட்ட மிகக்குறைவான ஸ்கோர் 26 ரன்கள். 1955ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக நியூசிலாந்து அணி, ஒரு இன்னிங்ஸில் 26 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 
 

click me!