ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இன்று மோதல்...

 
Published : Nov 23, 2017, 10:00 AM ISTUpdated : Sep 19, 2018, 01:29 AM IST
ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இன்று  மோதல்...

சுருக்கம்

Australias first match of the Ashes Test series today ...

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட  "ஆஷஸ் டெஸ்ட்" கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி இன்றுத் தொடங்குகிறது.

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் இன்று ஆஷஸ் டெஸ்ட் தொடரில் முதல் ஆட்டம் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் இடையே நடைபெறுகிறது.

ஆஸ்திரேலிய அணிக்கு ஸ்டீவ் ஸ்மித்தும், இங்கிலாந்து அணிக்கு ஜோ ரூட்டும் தலைமை தாங்குவது இதுவே முதல் முறையாகும்.

கடந்த முறை 2015-ஆம் ஆண்டு சொந்த மண்ணில் நடைபெற்ற இந்த போட்டியில் இங்கிலாந்து 3-2 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியிருந்தது.

ஆஸ்திரேலியாவில் வேகப்பந்துவீச்சுக்கு மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேஸில்வுட், பட் கம்மின்ஸ் ஆகியோரும், அணியின் பேட்டிங்கை பொருத்த வரையில் டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரும் உள்ளனர்.

அணியில் புதிதாக கேமரூன் பான்கிராஃப்ட் சேர்க்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து அணியைப் பொருத்த வரையில், பேட்டிங்கில் ஜோ ரூட், அலாஸ்டர் குக் ஆகியோர் கலக்க, பந்துவீச்சில் கிறிஸ் வோக்ஸ் உள்ளிட்டோர் பலம் காட்ட உள்ளனர்.

பென் ஸ்டோக்ஸ், அணியில் இல்லாதது இங்கிலாந்தின் பேட்டிங்கிற்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

ஓவராக குடித்து மட்டையான இங்கிலாந்து வீரர்கள்! ஆஷஸ் தோல்விக்கு காரணம் இப்பதான் புரியுது!
20 வயதில் டி20 உலகக்கோப்பை வெற்றி; அதுவே தொடர் வெற்றிக்கு நம்பிக்கை தந்தது: ரோஹித் சர்மா