
இந்தியாவின் இளம் நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஹர்திக்பாண்டியா பொதுவாகவே ஆங்கில பாடல்களை கேட்டு மகிழ்பவர்.கிரிக்கெட் தொடங்கும் முன்பு கூட சில ஆங்கில பாடல்களை கேட்பாராம்...
அதுசரி....இப்ப என்ன சொல்ல போறீங்கனு கேட்கிறீர்களா?
இந்திய அணி கேப்டன் விராத் கோலி ‘பிரேக்பாஸ்ட் வித் சாம்பியன்ஸ்’ என்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்.அப்போது இந்திய அணியின் இளம் ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா பற்றிகேட்கப் பட்டது.
விராட்கோலி சொன்ன பதில் என்ன தெரியுமா ?
வீரர்கள் அனைவரும் பொதுவாகவே எங்கள் ட்ரஸிங் ரூமில் பஞ்சாபி பாடல்களையே விரும்பி கேட்போம்.ஆனால், பாண்டியா தந்து ஐபாடில் ஆங்கிலப் பாடல்களை மட்டும் கேட்டுக்கொண்டு அதற்கேற்றார் போல் தனியாக ஆடிக்கொண்டிருப்பார்.
இதுல என்ன வேடிக்கை என்றால்,அந்த ஆங்கிலப் பாடல்களில் அவருக்கு 5 வார்த்தைகளுக்கு மேல் தெரியாது...இருந்தாலும் அதனையே கேட்டுக்கொண்டு இருப்பார் என தெரிவித்தார்.பாண்டியாவின் இந்த செயல் எங்களைசெம கடுப்பாக்கிவிடும் என தெரிவித்துள்ளார் விராட்கோலி
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.