
அதிக கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து போட்டியிடும் சூழல் நேரிடும்போது விளையாட முடியாத இந்திய வீரர்கள் ஓய்வில் செல்லலாம் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் தெரிவித்தார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி ஒன்று அளித்தார்.
அதில், "அதிக கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்க வேண்டிய சூழல் வரும்போது, வீரர்களால் தொடர்ந்து விளையாட முடியாத பட்சத்தில் ஓய்வில் செல்லலாம்.
அவர்கள் அனைவரும் தொழில்முறை வீரர்கள். ஒரு தொழில்முறை வீரர், 'என்னால் விளையாட முடியும்; என்னால் விளையாட முடியாது' என்று சொல்லலாம்.
அதிக கிரிக்கெட் போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று சொல்லும் வீரர்கள் பக்கம் நான் இருக்க மாட்டேன். அவர்கள் சார்பாக என்னால் எந்த விளக்கமும் அளிக்க முடியாது.
இந்திய கிரிக்கெட் அணி கடந்த 15 ஆண்டுகளாக மிகச் சிறப்பாக விளையாடி வருகிறது" என்று அவர் தெரிவித்தார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.