
இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியில் தமிழக வீரரான விஜய் சங்கர் சேர்க்கப்பட்டு உள்ளார்.
இலங்கைக்கு எதிரான இரண்டு டெஸ்ட் ஆட்டத்தில், இந்திய அணியில் தமிழக வீரரான ஆல்-ரௌண்டர் விஜய் சங்கர் (26) சேர்க்கப்பட்டுள்ளார்.
ரஞ்சி கிரிக்கெட்டில் தற்போது விளையாடிவரும் விஜய் சங்கர், இந்திய அணியில் சேர்க்கப்பட்டதால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார். நெல்லையைச் சேர்ந்தவரான இவர், ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ், ஐதராபாத் சன் ரைஸஸ் அணிகளுக்காக விளையாடி இருக்கிறார்.
மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் செய்தியாளர்களிடம் நேற்று இதுகுறித்து அவர் கூறியது:
"இந்திய அணியில் இடம்பிடிப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை. என்னுடைய நீண்ட நாள் கனவு பலித்துவிட்டது. இதற்காக நான் மிகக் கடுமையாக உழைத்திருக்கிறேன். இந்திய 'ஏ' அணியில் விளையாடியது, ஆல்-ரௌண்டராக உருவெடுக்க மிகவும் உதவியாக இருந்தது.
எந்த இக்கட்டான சூழ்நிலையையும் எதிர்கொண்டு விளையாடுவேன். ரஞ்சி கிரிக்கெட்டில் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினேன். எனக்கு அதிக ஓவர்களை சிறப்பாக வீச முடியும். பேட்டிங்கிலும் நல்ல பயிற்சி பெற்றிருக்கிறேன்" என்று அவர் தெரிவித்தார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.