
ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய அணியின் புஜாரா 4-வது இடத்துக்கும், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 5-ஆவது இடத்துக்கும் முன்னேறினர்.
கொல்கத்தாவில் அண்மையில் நடந்துமுடிந்த இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தின் இரண்டாவது இன்னிங்ஸில் கோலி 104 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இது, சர்வதேச கிரிக்கெட்டில் அவர் பதிவு செய்த 50-வது சதமாகும்.
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் 5 நாள்களும் பேட் செய்து புஜாரா சாதனை படைத்தார்.
டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித் முதலிடத்தில் உள்ளார்.
இங்கிலாந்தின் ஜோ ரூட் இரண்டாவது இடத்திலும், நியூஸிலாந்தின் கேன் வில்லியம்சன் 3-வது இடத்திலும் உள்ளனர்.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவன் 28-வது இடத்துக்கு முன்னேறினார்.
ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் பந்துவீச்சாளர் தரவரிசையில் இந்திய அணியின் பந்துவீச்சாளரும், ஆல்-ரௌண்டருமான ரவீந்தர் ஜடேஜா 3-வது இடத்துக்கு சரிந்தார். அதேநேரம், ஆல்-ரவுண்டர் தரவரிசையில் இவர 2-வது இடம் வகிக்கிறார்.
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்ட இந்திய அணியின் வேகப் பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார், ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் 8 இடங்கள் முன்னேறி 29-வது இடத்தில் இருக்கிறார்.
மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி 18-வது இடத்துக்கும் முன்னேறியுள்ளார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.