
ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் காலிறுதிச் சுற்றில் காயம் காரணமாக தொடர்ந்து விளையாட முடியாமல் ஸ்பெயினின் ரஃபேல் நடால் 5-வது செட்டில் விலகுவதாக அறிவித்து விலகினார்.
மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான நடால் - உலகின் 6-ஆம் நிலை வீரரான மரின் சிலிச் ஆகியோர் காலிறுதியில் மோதினர்.
கடைசி செட்டின்போது நடாலுக்குக் காயம் ஏற்பட்டது. இதனால் அவரால் ஆட்டத்தைத் தொடரமுடியாத நிலை ஏற்பட்டது. காலிறுதியில் காயம் காரணமாக தொடர்ந்து விளையாட முடியாமல் 5-வது செட்டில் விலகுவதாக ஸ்பெயினின் ரஃபேல் நடால் அறிவித்தார்.
இதனால், நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில், 3-6, 6-3, 6-7 (5-7), 6-2, 2-0 என்ற செட் கணக்கில் குரோஷியாவின் மரீன் சிலிச் வெற்றி பெற்றார்.
இதன்மூலம் மரீன் சிலிச், 2-வது முறையாக அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
சர்வதேச ஒற்றையர் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள வீரரும், ஆஸ்திரேலியன் ஓபன் முன்னாள் சாம்பியனுமான நடால், கடந்த ஆண்டு இறுதிச்சுற்று வரை முன்னேறி தோல்வியைச் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.