ஆஸ்திரேலியாவை 492 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது தெ.அணி; இதுக்கு பேர் தான் மரண அடி...

First Published Apr 4, 2018, 10:47 AM IST
Highlights
Australia defeated Australia by 492 runs This is the death toll ...


ஆஸ்திரேலியாவை 492 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 3-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றி அசத்தியது தென்னாப்பிரிக்க அணி. 

தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையே 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்ஸ் நகரில் நடைபெற்றது. 

போட்டியின் ஐந்தாவது நாளான நேற்று வேகப்பந்து வீச்சாளர் பிலாண்டர் அதிரடி பந்து வீச்சால் ஆஸி அணி 119 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.  21 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்திய பிலாண்டர் தனது 54-வது டெஸ்ட் போட்டியில் 200-வது விக்கெட்டையும் வீழ்த்தினார். 

4-வது டெஸ்டின் முடிவில் தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 488 ஓட்டங்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 344/6 (டிக்ளேர்) பெற்றிருந்தது. அதிகபட்சமாக டூப்பிளெசிஸ் 120 ஓட்டங்கள், டீன் எல்கர் 81 ஓட்டங்களை எடுத்தனர். 

ஆஸி தரப்பில் பேட் கம்மின்ஸ் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 221 ஓட்டங்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் 119 ஓட்டங்களையும் மட்டுமே எடுத்தது. ஆஸி அணி தரப்பில் ஜோபர்ன்ஸ் மட்டுமே அதிகபட்சமாக 42 ஓட்டங்களை எடுத்தார். 

தென்னாப்பிரிக்கா தரப்பில் பிலாண்டர் 21 ஓட்டங்களை மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்தப் போட்டியின் சிறந்த வீரராக பிலாண்டரும், டெஸ்ட் தொடரின் சிறந்த வீரராக காகிஸா ரபாடாவும் தேர்வு செய்யப்பட்டனர்.

தென்னாப்பிரிக்க அணி கடந்த 1969 - 70-ஆம் ஆண்டுக்கு பின் தனது சொந்த மண்ணில் முதன்முறையாக டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.

tags
click me!