
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தொடக்க வரிசையில் தோனி களமிறங்குவார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அதில், "இந்திய கிரிக்கெட் அணியில் தோனி 6 அல்லது 7-வது பேட்ஸ்மேனாக களமிறங்குகிறார். இதற்கிடையே 2 ஆண்டுகள் தடைக்கு பின்னர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சிஎஸ்கே அணி இடம் பெற்றுள்ளது.
தற்போது தொடக்க வரிசையில் தோனியை களமிறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அணியில் பல்வேறு பன்முகத் திறமை வாய்ந்த வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
மார்க் உட், லுங்கி கிடி, இந்திய வீரர் தாகூர் ஆகியோர் தங்கள் பங்கை சிறப்பாக செய்வார்கள். மேலும் சுழல்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் இடம் பெற்றுள்ளதும் அணிக்கு வலிமை தந்துள்ளது. அவர் பந்துவீச்சோடு, சிறப்பாக பேட்டிங்கும் மேற்கொள்வார்" என்று அவர் தெரிவித்தார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.