வெறித்தனமாக ஆடி வெற்றியை அடைந்தது சென்னை சிட்டி எஃப்சி, இந்தியன் வங்கி…

Asianet News Tamil  
Published : Mar 15, 2017, 11:29 AM ISTUpdated : Sep 19, 2018, 02:42 AM IST
வெறித்தனமாக ஆடி வெற்றியை அடைந்தது சென்னை சிட்டி எஃப்சி, இந்தியன் வங்கி…

சுருக்கம்

Audi hit madly Chennai City FC Indian Bank

சென்னை லீக் சீனியர் டிவிஷன் கால்பந்துப் போட்டியில் சென்னை சிட்டி எஃப்சி, இந்தியன் வங்கி அணிகள் வெற்றி அடைந்தன.

சென்னை ஜவாஹர்லால் நேரு மைதானத்தில் நடைபெற்ற சென்னை லீக் சீனியர் டிவிஷன் கால்பந்துப் போட்டியின் முதல் ஆட்டத்தில், சென்னை சிட்டி எஃப்சி - சுங்கத் துறை அணிகள் மோதின.

ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளுமே கோல் அடிக்கவில்லை. பின்னர் நடைபெற்ற ஆட்டத்தில் 68 மற்றும் 82-ஆவது நிமிடங்களில் சென்னை வீரர் ஜாசெப் இரு கோல்கள் அடித்தார். சக வீரர் அருண் 88-ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

இதில் சென்னை சிட்டி எஃப்சி அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணியின் ஜாசெப் இகெசுகு ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

மற்றொரு ஆட்டத்தில், இந்தியன் வங்கி அணி, ஐசிஎப் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

இந்த ஆட்டத்தின் 7-ஆவது நிமிடத்தில் முதல் கோல், இந்தியன் வங்கி அணிக்கு சாதகமாக, ஐசிஎப் வீரரால் அடிக்கப்பட்டது. அதை சரி செய்யும் வகையில் ஐசிஎப் வீரர் ராம கிருஷ்ணன் 9-ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

அதற்கு பதிலடியாக, 35-ஆவது நிமிடத்தில் லாலியான் ஒரு கோல் அடித்தார். பின்னர், இறுதி வரை ஐசிஎப் அணிக்கு கோல் வாய்ப்பு கிடைக்காததால், இந்தியன் வங்கி வென்றது.

அந்த அணியின் லாலியான் சங்கா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றிய கிரிக்கெட் வாரியம்.. இந்திய அணி வங்கதேசம் சுற்றுப்பயணம்? புது தகவல்!
2026 உலகக் கோப்பை போட்டியை யாரும் பார்க்க மாட்டாங்க! ஐசிசி-யை வறுத்தெடுத்த அஸ்வின்!