
இண்டியன்வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் 4-ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.
இண்டியன்வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவு 3-ஆவது சுற்றில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் செக். குடியரசின் லூஸி சஃபரோவாவை 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.
மற்றொரு 3-ஆவது சுற்று ஆட்டத்தில், டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி, 6-3, 6-1 என்ற நேர் செட் கணக்கில் செக். குடியரசின் கேத்தரின் சினியாகோவாவை வீழ்த்தினார்.
சீனாவின் பெங் ஷுவாய் 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் போலந்தின் அக்னீஸ்கா ரத்வான்ஸ்காவை வீழ்த்தினார்.
ஆடவர் ஒற்றையர் பிரிவு 3-ஆவது சுற்றில் ஜெர்மனியின் பிலிப் கோல்ஷ்ரைபருடன் மோதினார் வாவ்ரிங்கா.
இருவருக்கும் இடையே விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முடிவில் வாவ்ரிங்கா 7-5, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றதன்மூலம் பிலிப்புக்கு எதிரான தனது 5-ஆவது வெற்றியை பதிவுச் செய்துள்ளார் வாவ்ரிங்கா.
வாவ்ரிங்கா தனது 4-ஆவது சுற்றில் ஜப்பானின் யோஷிஹிடோ நிஷியோகாவை சந்திக்க உள்ளார்.
மற்றொரு 3-ஆவது சுற்றில், போட்டித் தரவரிசையில் 13-ஆவது இடத்தில் இருந்த செக். குடியரசின் தாமஸ் பெர்டிச்சை 1-6, 7-6(5), 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி 4-ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார் யோஷிஹிடோ.
மற்றொரு 3-ஆவது சுற்றில் ஆஸ்திரியாவின் டொமினிக் தீம், ஜெர்மனியின் மிஸ்காஸ்வரெவை 6-1, 6-4 என்ற நேர் செட்களில் வீழ்த்தினார்.
டொமினிக் தீம் தனது 4-ஆவது சுற்றில் பிரான்ஸின் கேல் மான்ஃபில்ûஸ சந்திக்கிறார்.
கேல் மான்ஃபில்ஸ் தனது மூன்றாவது சுற்றில், அமெரிக்காவின் ஜான் இஸ்னரை 6-2, 6-4 என்ற நேர் செட்களில் தோற்கடித்தார்.
செர்பியாவின் டுசான் லாஜோவிக் 6-7(7/4), 6-3, 7-5 என்ற செட் கணக்கில் கனடாவின் வாசெக் போஸ்பிஸிலை வீழ்த்தினார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.