இந்தோனேஷியாவில் இன்று தொடங்குகிறது ஆசிய விளையாட்டு போட்டிகள்!! பதக்கங்களை குவிக்கும் முனைப்பில் இந்தியா

By karthikeyan VFirst Published Aug 18, 2018, 9:54 AM IST
Highlights

இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவில் 18வது ஆசிய விளையாட்டு போட்டிகள் இன்று மாலை கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்குகின்றன.
 

இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவில் 18வது ஆசிய விளையாட்டு போட்டிகள் இன்று கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்குகின்றன.

ஆசிய விளையாட்டு போட்டிகள் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. ஒலிம்பிக் போட்டிகளுக்கு அடுத்தபடியாக உலகின் மிகப்பெரிய விளையாட்டு விழாவாக ஆசிய போட்டிகள் திகழ்ந்துவருகின்றன.

18வது ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தோனேஷியாவின் ஜகார்த்தா மற்றும் பாலேம்பங் நகரில் இன்று கோலாகலமாக கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்குகிறது. செப்டம்பர் 2ம் தேதி வரை போட்டிகள் நடைபெறுகின்றன. 

இந்த போட்டிகளில் இந்தியா, சீனா, ஜப்பான், மலேசியா உள்ளிட்ட 45 நாடுகளை சேர்ந்த 10,000 வீரர், வீராங்கனைகள் கலந்துகொள்கின்றனர். இந்தியா சார்பில்  524 வீரர், வீராங்கனைகள் கலந்துகொள்கின்றனர். அதிக பதக்கங்களை வெல்லும் முனைப்பில் இந்திய வீரர், வீராங்கனைகள் களமிறங்குகின்றனர்.

தொடக்க விழா ஜகார்த்தாவில் உள்ள ஜெலரோ பங் கர்னோ விளையாட்டரங்கில் இன்று மாலை நடைபெறவுள்ளது. 4000 கலைஞர்கள் பங்கேற்கும் கலைநிகழ்ச்சிகள் மாலை 5 மணிக்கு தொடங்கி இரவு 10 மணி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 

click me!