பலரும் ஆர்வமுடன் எதிர்பார்த்து வந்த ஆசிய விளையாட்டு போட்டிகள் விரைவில் துவங்க உள்ளது இந்நிலையில் இந்த போட்டியில் பங்கு பெறும் இந்திய கால்பந்தாட்ட வீரர்களின் பட்டியல் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது.
சீன நாட்டில் உள்ள ஹாங்சு நகரில் வருகின்ற செப்டம்பர் மாதம் 23ம் தேதி துவங்க இருக்கிறது 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள். செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி துவங்கும் இந்த போட்டிகள் அக்டோபர் மாதம் 8ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது.
இந்நிலையில் இந்த ஆட்சிய விளையாட்டு போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய கால்பந்தாட்ட அணியின் 22 பேர் கொண்ட வீரர்களுடைய பட்டியலை தற்போது தங்களுடைய அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது இந்திய கால்பந்தாட்ட அணி அவர்கள் வெளியிட்டுள்ள பட்டியலின் படி 22 பேர் இந்த போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர்
குருப்ரீத் சிங் சந்து, குருமீட் சிங், திராஜ் சிங், ஜிக்சன் சிங், சுரேஷ் சிங், அமர்ஜித் சிங் கியாம், மகேஷ் சிங், அன்வர் அலி, ரோகித் தனு, ரஹீம் அலி உள்ளிட்ட பல வீரர்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர் இதில் சிறப்பு அம்சமாக தமிழக வீரர் சிவசக்தி நாராயணன் இந்திய கால்பந்தாட்ட அணியின் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.
🚨 🇮🇳 𝙼𝚎𝚗’𝚜 𝚂𝚚𝚞𝚊𝚍 𝙰𝚗𝚗𝚘𝚞𝚗𝚌𝚎𝚍 🚨
More details 👉🏽 https://t.co/VzlDYo5P6S ⚽️ pic.twitter.com/ip9Ylh0QKS
ஆசிய விளையாட்டு கால்பந்து போட்டியானது பொதுவாக 23 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியாகும், ஆனால் இம்முறை இந்த நிகழ்வை நடத்துவதற்கு ஓராண்டு கால தாமதம் ஏற்பட்டதால், 24 வயதுடையவர்களை, கட்-ஆஃப் பிறந்த தேதியுடன் பங்கேற்க ஏற்பாட்டாளர்கள் அனுமதித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
WI vs IND 3rd ODI: இஷான் கிஷான், கில், ஹர்திக் பாண்டியா அதிரடி; இந்தியா 351 ரன்கள் குவிப்பு!