பிரதமர் மோடியின் பாராட்டுக்கு நன்றி: ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்கள் நெகிழ்ச்சி

Published : Oct 11, 2023, 12:41 PM IST
பிரதமர் மோடியின் பாராட்டுக்கு நன்றி: ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்கள் நெகிழ்ச்சி

சுருக்கம்

பிரதமர் மோடியின் தங்களுக்கு அளிக்கும் ஆதரவை ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற வீரர் வீராங்கனைகள் பாராட்டிப் பேசினர்.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய வீரர் வீராங்கனைகள் சிறப்பான திறமையை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த போட்டிகளில் கலந்துகொண்ட வீரர் வீராங்கனைகளை பிரதமர் மோடி நேற்று சந்தித்து பேசினார். டெல்லியில் உள்ள தான் சந்த் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மோடி பங்கேற்றார்.

பிரதமர் மோடியின் தங்களுக்கு அளிக்கும் ஆதரவை ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற வீரர் வீராங்கனைகள் பாராட்டிப் பேசினர். பல்வேறு துறைகளில் இந்தியா சிறந்து விளங்குகிறது என்று ஈட்டி ஏறிதல் வீரர் நீரஜ் சோப்ரா கூறினார். இந்தியாவுக்கு அதிக வெற்றிகளை வழங்க இதுவே சரியான தருணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

முதல் முறை ஆசிய விளையாட்டுப் போட்டியில் இடம்பெற்று தங்கம் வென்றுள்ள இந்தியக் கிரிக்கெட் அணி சார்பில் கலந்துகொண்ட  இளம் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால்,  "பிரதமர் மோடி எங்களுக்கு மிகப்பெரிய உத்வேகம் அளித்து வருகிறார். அவர் இந்தியாவை பெருமைப்படுத்துவதைப் பார்க்கும் போதெல்லாம், நாமும் அதையே செய்ய வேண்டும் என்ற உறுதி ஏற்படுகிறது" எஎன்றார்.

குண்டு எறிதல் வீரர் ராஜேந்தர் சிங், பிரதமர் மோடியின் கீழ் கேலோ இந்தியா திட்டம் மற்றும் பிற முக்கிய திட்டங்கள் பற்றி வலியுறுத்தியுள்ளார். விளையாட்டுத் துறைக்கு பிரதமர் மோடி சிறப்பான ஆதரவு அளித்துள்ளார் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

முதல் T20: ஜெமிமா ருத்ரதாண்டவம்.. கைகொடுத்த ஸ்மிருதி மந்தனா.. இலங்கையை பந்தாடிய இந்தியா!
U19 ஆசிய கோப்பையை தட்டித் தூக்கியது பாகிஸ்தான்! 191 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வி!