ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடிய ஜடேஜா, ராகுல் அண்ட் கோலி – 3ஆவது வெற்றியை நோக்கி இந்தியா!

Published : Oct 11, 2023, 12:19 PM ISTUpdated : Oct 11, 2023, 12:30 PM IST
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடிய ஜடேஜா, ராகுல் அண்ட் கோலி – 3ஆவது வெற்றியை நோக்கி இந்தியா!

சுருக்கம்

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான உலகக் கோப்பையின் 9ஆவது லீக் போட்டி இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது.

டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பையின் 9ஆவது லீக் போட்டி இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது. நடந்து முடிந்த 4ஆவது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா 5 விக்கெட் இழப்பிற்கு 428 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய இலங்கை கடைசி வரை போராடி 326 ரன்கள் எடுத்து 102 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

18 ஒய்டா, நொந்து போன கேப்டன் ஷனாகா – தோல்விக்கு இது தான் காரணம்!

இதுவரையில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் 3 ஒரு நாள் போட்டிகளில் மோதியுள்ளன. இதில், ஒரு போட்டி கடந்த 2019 உலகக் கோப்பையில் நடந்தது. இதில் முதலில் ஆடிய இந்தியா 224/8 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் ஆடிய ஆப்கானிஸ்தான் 213/10 ரன்கள் மட்டுமே எடுத்து 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதில், இந்தியா 2 போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டியானது டையில் முடிந்துள்ளது.

ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு ஓய்வு, ஷமிக்கு வாய்ப்பு? இந்திய அணியின் பிளேயிங் 11!

இந்தியா – ஆப்கானிஸ்தான் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச ஸ்கோர்:

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இந்தியா அதிகபட்சமாக 252 ரன்கள் குவித்துள்ளது. 252/10, 49.5 ஓவர்கள் – போட்டி டிரா 2018

இந்தியா குறைந்தபட்ச ஸ்கோர் – 224/8, 50 ஓவர்கள் – இந்தியா 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி – 2019

ஆப்கானிஸ்தான் அதிகபட்ச ஸ்கோர் – 252/8, 50 ஓவர்கள் – போட்டி டிரா – 2018

ஆப்கானிஸ்தான் குறைந்தபட்ச ஸ்கோர் – 159, 45.2 ஓவர்கள் – 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி -2014

இந்திய அணியின் தனிநபர் அதிகபட்ச ஸ்கோர் – விராட் கோலி 67 ரன்கள்

இந்திய அணியின் சிறந்த பவுலிங் – ரவீந்திர ஜடேஜா – 4/30, 10 ஓவர்கள்

ஆப்கானிஸ்தான் அதிகபட்ச ஸ்கோர் – முகமது ஷாசாத் – 124 ரன்கள் (116 பந்துகள்)

ஆப்கானிஸ்தான் சிறந்த பவுலிங் – முகமது நபி – 2/33 (9 ஓவர்கள்)

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக கேஎல் ராகுல் 2 போட்டிகளில் விளையாடி 90 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 60 ரன்கள் எடுத்திருக்கிறார்.

உலகக் கோப்பையில் புதிய வரலாற்று சாதனை படைத்த பாகிஸ்தான் – 344 ரன்களை சேஸ் செய்து பிரம்மாண்ட வெற்றி!

 

இந்தியா:

ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, இஷான் கிஷான், ரவிச்சந்திரன் அஸ்வின், ஷர்துல் தாக்கூர், ஜஸ்ப்ரித் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ்.

ஆப்கானிஸ்தான்:

ஹஷ்மதுல்லா ஷாஹிடி (கேப்டன்), ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), இப்ராஹிம் ஜத்ரன், ரியாஸ் ஹசன், ரஹ்மத் ஷா, நஜ்புல்லா ஜத்ரன், முகமது நபி, இக்ராம் அலிகில், அஸ்மதுல்லா உமர்சாய், ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான், நூர் அகமது, ஃபசல்ஹக் ஃபாரூக்கி, அப்துல் ரஹ்மான், நவீன் உல் ஹக்.

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

இதுதான் bazball ஆட்டம்..! இங்கிலாந்துக்கு பாடம் கற்பித்த ஆஸ்திரேலியா! 3 பேர் அதிரடி அரை சதம்!
வார்த்தையை விட்ட விராட் கோலி..! பிசிசிஐ அதிருப்தியால் மனம் மாற்றம்..! நடந்தது என்ன?