Asian Games 2026: 3வது தங்கத்தை கையில் ஏந்திய இந்தியா! ஈரானை வீழ்த்தி இந்திய மகளிர் கபடி அணி அபாரம்!

Published : Sep 26, 2026, 01:15 PM ISTUpdated : Sep 26, 2026, 01:17 PM IST
Asian Games 2026

சுருக்கம்

Asian Games 2026: ஜப்பானில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், மகளிர் கபடி இறுதிப்போட்டியில் ஈரானை 37-34 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி இந்திய அணி தங்கம் வென்று அசத்தியுள்ளது. இது இந்தியாவுக்கு 3வது தங்கம் ஆகும்.

ஜப்பானில் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெற்ற மகளிர் கபடி இறுதிப்போட்டியில் ஈரானை 37-34 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி இந்திய அணி தங்கம் வென்று அசத்தியுள்ளது. இது இத்தொடரில் இந்தியாவுக்குக் கிடைத்த மூன்றாவது தங்கமாகும். இதற்கு முன்பு ஹாங்சோவ்வில் நடைபெற்ற போட்டியிலும் இந்திய அணிதான் சாம்பியன் பட்டம் வென்றிருந்தது.

3வது தங்கம் வென்ற இந்தியா

இன்றைய போட்டியின் கடைசி கட்டம் மிகவும் பரபரப்பாக இருந்தது. ஈரான் அணி எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று கடுமையாகப் போராடினார்கள். ஆட்டம் முடிய ஒரு நிமிடம் இருந்தபோது, ஈரானுக்குக் கட்டாயம் புள்ளிகள் தேவைப்பட்டன. ஆனால், இந்திய வீராங்கனைகள் சிறப்பாகச் செயல்பட்டு ஈரானின் அய்னாஸை (Aynaz) டேக்கிள் செய்து வெற்றியை உறுதி செய்தனர்.

Ajit Agarkar: ரோகித் சர்மாவுடன் மோதல்?.. இனி இந்த பதவி வேண்டாம்.. அஜித் அகர்கர் முடிவின் பின்னணி!

சஞ்சு தேவி அசத்தல்

கடைசியில் 37-34 என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்று, பதக்கப் பட்டியலில் இன்னொரு தங்கத்தைச் சேர்த்துள்ளது. இத்தொடர் முழுக்கவே சிறப்பாக விளையாடி வந்த சஞ்சு தேவி, இந்த இறுதிப்போட்டியிலும் ஈரானின் சவால்களை முறியடித்து இந்திய அணி வெற்றி பெற முக்கிய காரணமாக விளங்கினார்.

இந்த தங்கத்துடன் சேர்த்து இந்தியா இதுவரை 3 தங்கம், 11 வெள்ளி, 13 வெண்கலம் என்று மொத்தம் 27 பதக்கங்களை வென்று, பதக்கப் பட்டியலில் 12வது இடத்தில் உள்ளது.தங்கம் வென்ற இந்திய மகளிர் கபடி அணியில் பூஜா, ராஜ் ராணி, சோனாலி விஷ்ணு ஷிங்கடே, புஷ்பா, பாவனா தேவி, ரிது, சஞ்சு தேவி, ரிது நேகி, மனிஷா குமாரி, பிங்கி ராய், ஜோதி மற்றும் நிகிதா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

ஆண்கள் கபடி அணியும் தங்கம் வெல்லுமா?

இன்று நடைபெறும் ஆண்கள் கபடி இறுதிப்போட்டியிலும் இந்திய அணி ஈரானை எதிர்கொள்ளவுள்ளது. முன்னதாக, ஆண்கள் மாரத்தான் போட்டியில் சவான் பர்வால் 2:11:37 மணி நேரத்தில் இலக்கை அடைந்து தேசிய சாதனையுடன் வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன் மூலமாக ஆசிய விளையாட்டு மாரத்தான் போட்டியில் 40 ஆண்டுகளாகப் பதக்கம் வெல்லாத இந்தியாவின் காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது.

ஜோஷ்னா சின்னப்பா - வேலவன் செந்தில்குமார் ஜோடி வெண்கலம்

மகளிர் 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன்ஸ் அணிகள் பிரிவில் ஆஷி சௌக்சி, திலோத்தமா சென் மற்றும் விதர்சா வினோத் ஆகியோர் வெள்ளிப் பதக்கம் வென்றனர். தனிநபர் பிரிவு இறுதிப்போட்டியில் திலோத்தமா நான்காவது இடத்தையும், விதர்சா ஐந்தாவது இடத்தையும் பிடித்தார்கள். ஸ்க்வாஷ் கலப்பு இரட்டையர் அரையிறுதியில் ஜோஷ்னா சின்னப்பா - வேலவன் செந்தில்குமார் ஜோடி, ஹாங்காங்கின் டாங் மிங் ஹாங் - லீ கா யி ஜோடியிடம் தோல்வியடைந்து வெண்கலப் பதக்கம் வென்றது.

'ஜப்பானுக்கு இதுக்கா போனீங்க'.. பும்ராவை கலாய்த்து தள்ளிய மனைவி சஞ்சனா.. என்ன நடந்தது?

தடகளத்திலும் இந்தியா அசத்தல்

வில்வித்தை தகுதிச்சுற்றில் தீரஜ் பொம்மதேவரா 698 புள்ளிகள் பெற்று ஆசிய மற்றும் தேசிய சாதனையுடன் ஆண்கள் ரிகர்வ் பிரிவில் முதலிடம் பிடித்தார். அதேபோல, மகளிர் காம்பவுண்ட் தகுதிச்சுற்றில் சிகிதா தனிபர்த்தி 705 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளார். பேட்மிண்டன் போட்டியில் உன்னதி ஹூடா அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

தடகளத்தில் ஆடவர் 200 மீட்டர் ஓட்டப்பந்தய ஹீட்ஸில் அனிமேஷ் குஜூர் முதலிடம் பிடித்து அரையிறுதிக்குத் தகுதி பெற்றார். வாள்வீச்சு போட்டியில் மகளிர் அணி 45-24 என இந்தோனேசியாவையும், ஆண்கள் சேபர் அணி 45-27 என பிலிப்பைன்ஸையும் வீழ்த்தின. ஆனால், இரண்டு அணிகளுமே காலிறுதியில் தோல்வியடைந்து வெளியேறிவிட்டன.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

Asian Games 2026: 2வது தங்கத்தை தட்டித் தூக்கிய இந்தியா! துப்பாக்கி சுடுதலில் கமல்ஜீத் - சுருசி சாதனை!
Ajit Agarkar: ரோகித் சர்மாவுடன் மோதல்?.. இனி இந்த பதவி வேண்டாம்.. அஜித் அகர்கர் முடிவின் பின்னணி!