asia cup 2022: ஆசியக் கோப்பை டி20 தொடரை நடத்தும் வாய்ப்பு யாருக்கு? இலங்கை வாரியத்துக்கு கிடைக்குமா?

By Pothy RajFirst Published Jul 16, 2022, 3:07 PM IST
Highlights

ஆசியக் கோப்பை டி20 போட்டியை திட்டமிட்டபடி எங்களால் நடத்த முடியும் என இலங்கை கிரிக்கெட் வாரியம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

ஆசியக் கோப்பை டி20 போட்டியை திட்டமிட்டபடி எங்களால் நடத்த முடியும் என இலங்கை கிரிக்கெட் வாரியம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இலங்கையில் தற்போது பெரும் குழப்பமான சூழலும், அரசியல் நிலையற்ற தன்மையும் இருக்கிறது.மக்கள் போராட்டம், விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என பல துன்பங்களை மக்கள் சந்தித்தபோதிலும் கிரிக்கெட்டை மட்டும் விட்டு விலகவில்லை

இலங்கையின் பொருளாதாரம் அதாள பாதாளத்துக்குச சென்றுவிட்டது. பொருளாதார சீரழிவுக்குக் காரணமாகிய அதிபர் கோத்தபய ராஜகபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்சவை பதவியிலிருந்து இறக்கக் கோரி மக்கள்மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தி,பதவியிலிருந்து இறக்கியுள்ளனர்.

இருப்பினும் இலங்கையின் பொருளதார நிலை மீட்சி நிலையைக் கூட எட்டவில்லை. பெட்ரோல், டீசல் வாங்க அந்நியச் செலாவணி  இல்லாமலும், இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு டாலரில் பணம்கொடுக்க முடியாமலும் தவிக்கிறது. 

பணவீக்கம் 75 சதவீதத்தை எட்டிவிட்டதால், உணவுப் பொருட்கள், மருந்துகள், அத்தியாசவசியப் பொருட்கள், பால்பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இப்போதுள்ள நிலையில் இலங்கை நாட்டை மீட்பதற்கு சுற்றுலாத்துறை மீட்சி கண்டு, டாலரில் வருமானம் வந்தால்தான் மீட்சி பெறும். ஆதலால், கிரிக்கெட் தொடர்களை நடத்தி அதன் மூலம் வெளிநாட்டினர் வருகையும், சுற்றுலாத்துறையும் மீட்சிஅடையும் என நம்புகிறது

ஆதலால், இலங்கையில் எத்தகைய அரசியல் குழப்பமான சூழல் நிலவினாலும், நாட்டுக்கு அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதில் ஆர்வம் காட்டிவருகிறது.  

இலங்கையில் பெரிய அளவிலான மக்கள் போராட்டம் நடந்த நிலையில்கூட ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டித் தொடரை வெற்றிகரமாக நடத்தி முடித்துவிட்டது. பாகிஸ்தானுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரும் இன்று தொடங்கியுள்ளது.

முன்பு வந்த தகவலின்படி, ஆசியக் கோப்பையை நடத்தும் உரிமையை இலங்கை இழந்துவிடும் என்று கூறப்பட்டது. ஆனால், ஆஸ்திரேலியா மற்றும்  பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதன் மூலம் இலங்கை அரசு ஆசியக் கோப்பைத் தொடரையும் வெற்றிகரமாக நடத்த முடியும் என நம்புகிறது.

இலஹ்கை கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் மோகன் டி சில்வா கூறுகையில் “ எங்களைப் பொருத்தவரை இரு நாடுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை நடத்தி விட்டோம். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் நடந்து முடிந்துவிட்டது, பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. ஆதலால் ஆசியக் கோப்பை டி20 தொடரையும் நடத்த முடியும்” எனத் தெரிவித்தார்.

 ஆனால், ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்தும் உரிமையை ஆசியக் கிரிக்கெட் கவுன்சில் இலங்கைக்கு திரும்ப வழங்குமா என்பது தெரியவில்லை.

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய 5 அணிகளும், ஆகஸ்ட் 20 முதல் 26ம்தேதி நடக்கும் தகுதிச்சுற்றில் வெல்லும் அணி 6-வது அணியாக தகுதி பெறும். தகுதிச்சுற்றில் ஹாங்காங், குவைத், சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம் நாடுகள் பங்கேற்கின்றன.

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஆகஸ்ட் 27ம்தேதி தொடங்குகிறது. ஒருவேளை இலங்கையில் ஆசியக் கோப்பை நடத்த இயலாத சூழல் இருப்பதாக ஆசியக் கிரிக்கெட் கவுன்சில் முடிவு செய்தால், வங்கதேசத்தில்  நடத்தப்படும். அடுத்தவாரத்தில் ஆசியக் கோப்பை கவுன்சில் கூட்டம் நடக்கிறது, அந்தக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும்.
 
 

click me!