கடைசி நேரத்தில் வெஸ்ட் இண்டீஸை கதறவிட்ட அஷ்வின்!! பொறுப்பான பேட்டிங்.. இந்தியாவை மிரட்டிய வெஸ்ட் இண்டீஸ் கேப்டன்

By karthikeyan VFirst Published Oct 14, 2018, 11:57 AM IST
Highlights

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 367 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 
 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 367 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 311 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸை இழந்தது. 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி, இரண்டாம் நாளான நேற்றைய ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 308 ரன்களை எடுத்திருந்தது. ரஹானே 75 ரன்களுடனும் ரிஷப் பண்ட் 85 ரன்களுடனும் களத்திலிருந்தனர். 

இருவருமே சதமடிக்கும் நோக்கில் இன்றைய ஆட்டத்தை தொடர்ந்தனர். ஆனால் இரண்டாவது புதிய பந்தை பெற்றிருந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, புதிய பந்தில் அபாரமாக வீசியது. ஹோல்டரும் கேப்ரியலும் புதிய பந்தில் அபாரமாக வீசி ரஹானே, ஜடேஜா, ரிஷப் பண்ட் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினர். ரஹானே மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய இருவருமே சதத்தை தவறவிட்டனர். 

இதையடுத்து குல்தீப் மற்றும் உமேஷ் ஆகிய இருவரும் ஆட்டமிழந்தனர். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிய மறுமுனையில் அஷ்வின் நிதானமாகவும் பொறுப்பாகவும் அஷ்வின் ஆடினார். கடைசி விக்கெட்டுக்கு காயத்துடன் அஷ்வினுடன் ஜோடி சேர்ந்தார் ஷர்துல் தாகூர். ஷர்துல் தாகூர் விக்கெட்டை பறிகொடுத்துவிடாமல் பார்த்துக்கொள்ள அஷ்வின் முடிந்தவரை ரன்களை சேர்த்தார். 

கடைசி விக்கெட்டுக்கு அஷ்வினும் தாகூரும் சேர்ந்து 28 ரன்களை சேர்த்தனர். கடைசி விக்கெட்டாக 35 ரன்களில் அஷ்வின் ஆட்டமிழந்தார். இதையடுத்து இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 367 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வெஸ்ட் அணியின் கேப்டன் ஹோல்டர் அபாரமாக பந்துவீசி 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.  
 

click me!