
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, ஓ.பி.எஸ். முதலமைச்சராக பதவியேற்றார். இதை தொடர்ந்து ஜெயலலிதாவின் தோழி சசிகலா அதிமுக பொது செயலாளராக பொறுப்பேற்றார்.
இதையொட்டி நேற்று காலை அனைத்து அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்தது. அப்போது, ஒ.பன்னீர்செல்வம் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர், சசிகலாவை, சட்டமன்ற அதிமுக தலைவராக, அனைத்து எம்எல்ஏக்களும் ஏகமனதாக தேர்வு செய்தனர்.
இதைதொடர்ந்து சசிகலா முதலமைச்சராக தீர்மானமும் நிறைவேற்றி தேர்ந்தெடுத்தனர். இதையடுத்து, வரும் 9ம் தேதி சசிகலாவுக்கு, தமிழக கவர்னர் (பொறுப்பு) கவர்னர் வித்யாசாகர், பதவி பிரமாணம் செய்து வைப்பார் என கூறப்படுகிறது.
இதற்கிடையில், சசிகலா முதலமைச்சராக பொறுப்பேற்தற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து சமூக வளைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் ரவிச்சந்திரன், தனது டுவிட்டர் பக்கத்தில், 234 தொகுதியிலும் வேலை வாய்ப்பு வர இருப்பதாக கூறியுள்ளார். இதுகுறித்து அஸ்வின் ரவிச்சந்திரன், தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
தமிழக இளைஞர்கள் அனைவருக்கும், மாநிலத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் விரைவில் வேலை வாய்ப்புக்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால், அனைவரும் தயாராக வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.