'துப்பாக்கியை பிடிங்க வாஷி'; விஜய் பாணியில் வாஷிங்டன் சுந்தரிடம் சொன்ன அஸ்வின்; அடுத்த ஆஷ் அண்ணா ரெடி!

தனக்கு வாழ்த்து தெரிவித்த வாஷிங்டன் சுந்தருக்கு அஸ்வின் நகைச்சுவையாக பதில் அளித்துள்ளார். கோட் பட காட்சி பாணியில் அஸ்வின் சுந்தரிடம் கூறியுள்ளார். 

 Ashwin  given a humorous response to Washington Sundar who congratulated him ray

அஸ்வின் ஓய்வு 

இந்திய அணியின் மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து திடீரென ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரின் பாதியிலேயே அவர் ஓய்வு முடிவை அறிவித்துள்ளது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரின் 2 போட்டிகளில் விளையாட மறுக்கப்பட்டதாலேயே அஸ்வின் ஓய்வு பெற்றதாகவும், அவரை கம்பீர், ரோகித் சர்மா ஓரம்கட்டியதாகவும் தகவல் பரவி வருகின்றன.

Latest Videos

மறுபக்கம், அஸ்வினுக்கு அரசியல், சினிமா, விளையாட்டு பிரபலங்கள் அஸ்வினுக்கு வாழ்த்து மழை பொழிந்து கொண்டிருக்க தற்போது இந்திய அணியில் அஸ்வினின் இடத்தை பிடித்துள்ள வாஷிங்டன் சுந்தரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், ''சக அணி வீரர் என்பதையும் தாண்டி ஆஷ் அண்ணா, நீங்கள் எனக்கு விளையாட்டின் உத்வேகமாகவும், வழிகாட்டியாகவும், உண்மையான சாம்பியனாகவும் இருந்திருக்கிறீர்கள். 

வாஷிங்டன் சுந்தர் வாழ்த்து 

உங்களுடன் களம் கண்டது மற்றும் டிரஸ்ஸிங் ரூமை பகிர்ந்து கொண்டது பெருமையாக உள்ளது. உங்களை போலவே தமிழ்நாட்டில் இருந்து வந்துள்ள நான், சேப்பாக்கத்தின் அனைத்து மூலைகளிலிருந்தும் உங்களைப் பார்த்து வளர்ந்துள்ளேன். உங்களுக்கு எதிராகவும், உங்களுடன் சேர்ந்து விளையாடியும் வளர்ந்திருக்கிறேன். உங்களுடன் இருந்த ஒவ்வொரு நிமிடமும் எனக்கு கிடைத்த பாக்கியம்.  உங்களிடம் இருந்து களத்திற்கு உள்ளேயேயும், வெளியேயும் கற்றவற்றை எப்போதும் என் நினைவில் வைத்திருப்பேன். உங்களது எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துகள்'' என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், வாஷிங்டன் சுந்தரின் வாழ்த்துக்கு அஸ்வின் விஜய்யின் 'கோட்' பட பாணியில் பதில் அளித்து இருப்பது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதாவது, ''துப்பாக்கியை புடிங்க வாஷி. அன்று இரவு வீரர்களின் கெட் டூ கெதர் மீட்டிங்கின்போது நீங்கள் பேசிய 2 நிமிடம் மிகவும் சிறப்பாக இருந்தது'' என்று அஸ்வின் வாஷிங்டன் சுந்தரின் பதிவுக்கு பதிலளித்துள்ளார். 

அஸ்வின் நகைச்சுவையான பதில் 

விஜய் நடித்த 'கோட்' படத்தில், சேப்பாக்கம் மைதானத்தில் வைக்கப்பட்ட வெடிகுண்டை கண்டறிந்து மக்களை காப்பாற்றுவதற்காக செல்லும் விஜய், மற்றொரு வில்லைனை கன்ட்ரோல் செய்வதற்காக தனது துப்பாக்கியை சிவகார்த்திகேயனிடம் கொடுத்து விட்டு செல்வதுபோல் ஒரு காட்சி அமைந்திருக்கும். உண்மையில் விஜய் சினிமாவை விட்டு அரசியலுக்கு செல்வதால் தனது இடத்தை சிவகார்த்திகேயனிடம் விட்டு செல்வதாக 'கோட்' பட காட்சியை வைத்து  ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இந்த 'கோட்' பட காட்சியை போல அஸ்வின் தனக்கே உரித்தான நகைச்சுவை பாணியில் வாஷிங்டன் சுந்தருக்கு பதில் அளித்துள்ளார. ''வாஷிங்டன் சுந்தரும் அஸ்வினை போல வலது கை ஸ்பின்னர்; சிறப்பாக பேட்டிங் செய்பவர். ஆகவே அஸ்வின் தனது இடத்தில் வாஷிங்டன் சுந்தரை ஏற்றுக்கொண்டுள்ளார். அடுத்த ஆஷ் அண்ணா ரெடி'' சமூகவலைத்தளத்தில் ரசிகர்கள் கமெண்ட்களை தெறிக்க விட்டு வருகின்றனர்.

vuukle one pixel image
click me!
vuukle one pixel image