இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்க்காரரான விராட் கோலி தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் விரைவில் இந்தியாவை விட்டு வெளியேறப் போவதாக வெளியாகியுள்ள தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்திய அணியின் நட்சத்திர வீரரும், முன்னாள் கேப்டனுமான விராட் கோலி இந்தியாவை விட்டு வெளியேற திட்டமிட்டு உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. டெல்லியில் பிறந்து வளர்ந்த கோலி, சில ஆண்டுகளுக்கு முன்பு மும்பைக்கு குடிபெயர்ந்தார். அவர் டிசம்பர் 2017 இல் இத்தாலியில் அனுஷ்காவுடன் திருமணம் செய்து கொண்டார் மற்றும் ஜனவரி 2021ல் விராட் கோலிக்கு முதல் குழந்தையும், 2024 தொடக்கத்தில் இரண்டாவது குழந்தையும் பிறந்தன.
விராட் கோலியின் (Virat Kohli) இளம் வயது பயிற்சியாளர் ராஜ்குமார் ஷர்மா தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், விராட், தனது மனைவி அனுஷ்கா சர்மா (Anushka Sharma) மற்றும் இரண்டு குழந்தைகளுடன் - வாமிகா (பிறப்பு ஜனவரி 2021) மற்றும் அகே (பிறப்பு பிப்ரவரி 2024) - லண்டனுக்கு குடியேறத் திட்டமிட்டுள்ளார், விரைவில் இந்தியாவை விட்டு வெளியேறி குடியேறுவார் என்று தெரிவித்துள்ளார்.
undefined
“விராட் தனது வாழ்க்கையில் மிகச்சிறந்த கிரிக்கெட்டை விளையாடி வருகிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் சதம் அடித்தார். வரவிருக்கும் இரண்டு டெஸ்டில் அவர் இன்னும் இரண்டு சதங்களை அடிப்பார் என்று நான் நம்புகிறேன். அவர் எப்போதும் தனது கிரிக்கெட்டை ரசிப்பவர். அவரது ஃபார்ம் கவலைக்குரிய விஷயம் அல்ல. இக்கட்டான சூழ்நிலையில் எப்படிச் செயல்படுவது மற்றும் தனது அணியை எப்படி வெற்றி பெறச் செய்வது என்பது அவருக்குத் தெரியும்."
“விராட் இன்னும் மிகவும் உடற்தகுதியுடன் இருக்கிறார், மேலும் அவர் ஓய்வு பெறும் வயதை அடையவில்லை. இன்னும் ஐந்து ஆண்டுகள் விளையாடுவார் என நினைக்கிறேன். 2027ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையில் அவர் இந்தியாவுக்காக நிச்சயம் விளையாடுவார். கடந்த 26 ஆண்டுகளாக அவரை நான் அறிவேன், அதனால்தான் அவரிடம் இன்னும் நிறைய கிரிக்கெட் உள்ளது என்று என்னால் கூற முடியும், ”என்று சர்மா மேலும் கூறினார்.