ஹாங்சோவில் இன்று நடந்த ஆண்களுக்கான பளுதூக்கும் போட்டியில் 65 கிலோ எடைபிரிவில் இந்தியாவின் அசோக் வெண்கலப் பதக்கம் கைப்பற்றியுள்ளார்.
ஹாங்சோவில் 4ஆவது பாரா ஆசிய விளையாட்டு போட்டி தொடங்கி நடந்து வருகிறது. கடந்த 22ஆம் தேதி தொடங்கிய இந்த தொடர் வரும் 28ஆம் தேதி வரையில் நடக்கிறது. இதில், இந்தியா சார்பில் 191 வீரர்கள் மற்றும் 112 வீராங்கனைகள் என்று மொத்தமாக 303 பேர் கலந்து கொண்டுள்ளனர். தற்போது நடந்து வரும் போட்டிகளில் கேனோ, பிளைண்ட் ஃபுட்பால், லான் பவுல்ஸ், ரோயிங் மற்றும் டேக்வாண்டோ ஆகிய ஐந்து விளையாட்டுகள் உட்பட 17 பிரிவுகளில் இந்தியா முதல் முறையாக பங்கேற்கிறது.
இரண்டாம் நாளான இன்று காலை முதலே இந்தியா தங்கம், வெள்ளி, வெண்கலம் என்று பதக்கங்களை குவித்து வருகிறது. இந்த நிலையில், தற்போது நடந்து முடிந்த ஆண்களுக்கான பவர்லிஃப்டிங் 65 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் அசோக் வெண்கலப் பதக்கம் கைப்பற்றியுள்ளார். இதன் மூலமாக இன்றைய நாள் முடிவில் இந்தியா 10 தங்கம், 12 வெள்ளி மற்றும் 13 வெண்கலப் பதக்கத்துடன் மொத்தமாக 35 பதக்கங்களுடன் 35 பதக்கங்களுடன் 4ஆவது இடம் பிடித்துள்ளது.
ஆண்களுக்கான 5000 மீ T13 தடகளப் போட்டியில் ஷரத் மகான்ஹள்ளி 0.1 வினாடிகளில் தங்கப் பதக்கம் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். இவர் 5000 மீ தூரத்தை 20:18:90 நிமிடங்களில் கடந்துள்ளார். ஜோர்டான் நாட்டைச் சேர்ந்த நபீல் கலீத் அகமது 20:18:91 நிமிடங்களில் கடந்து வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார். இதன் மூலமாக இந்தியா 9ஆவது தங்கப் பதக்கதை கைப்பற்றியுள்ளது.
இதே போன்று நடந்த ஆண்களுக்கான வட்டி எறிதல் F54/55/56 பிரிவில் இந்தியா தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலம் என்று கைப்பற்றியுள்ளது. இந்தப் போட்டியில் பங்கேற்ற நீரஜ் யாதவ் தங்கம் வென்றார். யோகேஷ் கதுனியா வெள்ளிப் பதக்கமும், முத்துராஜா வெண்கலப் பதக்கமும் கைப்பற்றியுள்ளனர்.
ஆண்களுக்கான 5000 மீ T46 தடகளப் போட்டியில் இந்தியாவின் பர்மோத் பிஜர்னியா வெள்ளிப் பதக்கமும், ராகேஷ் பைரா வெண்கலப் பதக்கம் கைப்பற்றினர். பெண்களுக்கான 10m Air Pistol SH1 பிரிவில் இந்தியாவின் ரூபினா பிரான்சிஸ் வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். ஆண்களுக்கான ஷாட்புட் F40 பிரிவில் இந்தியாவின் ரவி ரோங்காலி 9.92 மீ தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார். தற்போது வரையில் இந்தியா 10 தங்கம், 12 வெள்ளி மற்றும் 13 வெண்கலம் என்று மொத்தமாக 35 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 5ஆவது இடத்தில் உள்ளது.
இன்று காலையில் நடந்த போட்டிகள்:
ஆண்களுக்கான 10மீ ஏர் பிஸ்டல் SH1 பிரிவில் இந்தியா சார்பில் போட்டியிட்ட ருத்ரன்ஷ் கண்டேல்வாலுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. இதன் மூலமாக அவர் 2 பதக்கங்கள் கைப்பற்றியுள்ளார். இதற்கு முன்னதாக நேற்று நடந்த கலப்பு 50 மீ பிஸ்டல் SH1 பிரிவில் ருத்ரன்ஷ் கண்டேல்வால் வெள்ளிப் பதக்கம் கைப்பற்றியிருந்தார்.
4th Asian Para Games: வட்டு எறிதல் F54/55/56 பிரிவில் தங்கம், வெள்ளி, வெண்கலம் கைப்பற்றிய இந்தியா!
பெண்களுக்கான 400 மீ தடகளப் போட்டியில் இந்தியாவின் தீப்தி ஜீவன்ஜி 400 மீ T20 பிரிவில் இந்தியாவிற்கு 8ஆவது தங்கத்தை பெற்றுக் கொடுத்துள்ளார். பெண்களுக்கான 100 மீ T12 பிரிவில் இந்தியாவின் சிம்ரன் வெள்ளிப் பதக்கம் கைப்பற்றியுள்ளார். ஆண்களுக்கான 400 மீ T64 பிரிவில் அஜய் குமார் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
கேனோ (படகுப் போட்டி) KL 2 பிரிவில் இந்தியாவின் பிராச்சி யாதவ் பந்தய தூரத்தை 54.962 நிமிடங்களில் கடந்து தங்கம் கைப்பற்றி அசத்தியுள்ளார். இதற்கு முன்னதாக நேற்று நடந்த பெண்களுக்கான படகு போட்டி VL2 பிரிவில் பிராச்சி யாதவ் போட்டி தூரத்தை 1:03.47 வினாடிகளில் கடந்து வெண்கலப் பதக்கம் கைப்பற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மிகப்பெரிய சூப்பர் ஸ்டார் – இந்த கிரகத்தில் எளிமையான மனிதர் – ரஜினியை சந்தித்த இர்பான் பதான்!
இதே போன்று ஆண்களுக்கான கேனோவின் KL 3 பிரிவில் இந்தியாவின் கவுரவ் மனீஷ் பந்தய தூரத்தை 44.605 நிமிடங்களில் கடந்து வெண்கலம் வென்றார். மற்றொரு போட்டியில் கேனோவின் VL2 பிரிவில் கஜேந்திர சிங் வெண்கலப் பதக்கம் கைப்பற்றியுள்ளார். பெண்களுக்கான கிளப் எறிதல் போட்டியில் இந்தியாவின் ஏக்தா பயான் F32/51 என்ற பிரிவில் 21.66 மீ தூரம் வரையில் எறிந்து வெண்கலப் பதக்கம் கைப்பற்றியுள்ளார்.
10 மீ ஏர் பிஸ்டல் SH1 பிரிவில் ருத்ரன்ஷ் கண்டேல்வாலுக்கு வெள்ளிப் பதக்கம்!
The day ends with a beautiful 🥉by Ashok in Para Powerlifting 🥳 at
Join us in congratulating Ashok as he clinches victory in Men's 65kg weight category 🥳 Well done Champion💪🏻 🇮🇳 pic.twitter.com/xy0Dvs6xLT