ஆசிய விளையாட்டு போட்டியில் இன்று நடந்த ஆண்களுக்கான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்கம் கிடைத்துள்ளது. இதன் மூலமாக இந்தியா 6 தங்கம் வென்றுள்ளது.
ஹாங்ஷோவில் 19ஆவது ஆசிய விளையாட்டு போட்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், 45 நாடுகளைச் சேர்ந்த 12,000க்கும் அதிகமான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதுவரையில் இந்தியா துப்பாக்கி சுடுதல், மகளிர் கிரிக்கெட், குதிரையேற்றம் ஆகிய போட்டிகளில் 5 தங்கம் வென்றுள்ளது.
இந்த நிலையில் தான் 6ஆவது நாளான இன்று ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் அர்ஜுன் சீமா, சரப்ஜோத் சிங் மற்றும் ஷிவா நர்வா ஆகியோர் தங்கம் வென்றனர். மேலும், இதில், தனிப்பிரிவில் நடந்த இறுதிப் போட்டிக்கு சரப்ஜோத் சிங் மற்றும் அர்ஜூன் சீமா ஆகியோர் முன்னேறினர். எனினும், சரப்ஜோத் சிங் 4ஆவது இடம் பிடித்தார். அர்ஜூன் வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆறுதல் வெற்றியோடு CWCல் எண்ட்ரி கொடுக்கும் ஆஸ்திரேலியா – போராடி தோற்ற இந்தியா!
இதற்கு முன்னதாக துப்பாக்கி சுடுதல் பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் ரைபிள் பிரிவில் மனு பாக்கர், இஷா சிங் மற்றும் ரிதம் சங்வான் ஆகிய மூவரும் அணிகள் பிரிவில் 1759 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றனர். மேலும் இதே பிரிவில் மூன்று பேரும் இறுதிப் போட்டிக்கு முன்னேறினர். இதே போன்று நடந்த 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் தனிப்பட்ட பிரிவில் ஷிஃப்ட் கவுர் சாம்ரா தங்கம் கைப்பற்றினார். ஆஷி சௌக்ஷி வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். மேலும், இதில் நடந்த டீம் போட்டியில் ஷிஃப்ட் கவுர் சாம்ரா, ஆஷி சௌக்ஷி மற்றும் மனினி கௌசிக் ஆகியோர் வெள்ளி பதக்கம் வென்றுள்ளனர்.
🚨 𝐆𝐎𝐋𝐃 🥇 𝐅𝐎𝐑 𝐈𝐍𝐃𝐈𝐀 🇮🇳 🚨
The terrific trio of Arjun Cheema, Sarabjot Singh & Shiva Narwa clinched 𝐆𝐎𝐋𝐃 🥇 in 10m Air Pistol event. 🎯🔫
India beats host China by one point! Wow!! Well done... Super proud!! 🇮🇳💐
pic.twitter.com/xpCG78fIsu
ஆண்களுக்கான 10 மீ ஏர் ரைபிள் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் திவ்யான் சிங் பன்வார், ருத்ரான்க்ஷ் பாலாசாகேப் பாட்டீல், ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் ஆகியோர் 1893.7 புள்ளிகள் பெற்று தங்கம் வென்று அசத்தினர். இதுவரையில் நடந்த போட்டிகளின் படி இந்தியா 6 தங்கம், 8 வெள்ளி மற்றும் 10 வெண்கலப் பதக்கத்துடன் மொத்தம் 24 பதக்கங்கள் கைப்பற்றி பதக்கப் பட்டியலில் 5ஆவது இடத்தில் உள்ளது. சீனா, 81 தங்கம், 44 வெள்ளி மற்றும் 21 வெண்கலம் என்று 146 பதக்கங்களுடன் நம்பர் 1 இடத்தில் உள்ளது.
Congratulation! India's Gold rush continues : Trio of Arjun Cheema, Sarabjot Singh and Shiva Narwa shoots GOLD 🥇in 10m Air Pistol Team Men event pic.twitter.com/GA7I1pv68a
— DD News (@DDNewslive)