Hockey World Cup 2023: டிராவில் முடிந்த அர்ஜெண்டினா - ஆஸ்திரேலியா போட்டி!

By Rsiva kumar  |  First Published Jan 16, 2023, 9:36 PM IST

ஆண்களுக்கான ஹாக்கில் உலகக் கோப்பை தொடரில் இன்று நடந்த அர்ஜெடிணா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி டிராவில் முடிந்துள்ளது.
 


ஒடிசா மாநிலத்தில் ஆண்களுக்கான ஹாக்கி உலகக் கோப்பை தொடர் தொடர்ந்து நடந்து வருகிறது. இதற்கான தொடக்க விழா கடந்த 9 ஆம் தேதி கட்டாக் நகரில் நடந்தது. தற்போது 5 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பை ஆண்களுக்கான ஹாக்கி தொடர் லீக் போட்டிகள் ஒடிசா மாநிலத்தின் புவனேஷ்வர் மற்றும் ரூர்கேலா ஆகிய பகுதிகளில் நடந்து வருகிறது.

இதயப்பூர்வமாக அனைவருக்கும் நன்றி: சவால்களுக்கு தயாராக இருக்கிறேன்: ரிஷப் பண்ட் டுவிட்டரில் பதிவு!

Latest Videos

16 அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இந்த தொடரில் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு பிரிவில் உள்ள 4 அணிகளும், மற்ற 3 அணிகளுடன் தலா ஒரு போட்டியில் விளையாடும். குரூப்பில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் கால் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். இன்று நடந்த முதல் போட்டியில் தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய சிலி அணி இறுதியில் கோட்டைவிட்டது. இதன் மூலம் மலேசியா அணி 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

WIPL: மகளிர் ஐபிஎல் கிரிக்கெட்: ரூ.951 கோடிக்கு ஒளிபரப்பும் உரிமையை கைப்பற்றிய வையாகாம்-18 நிறுவனம்!

ஜனவரி 15 என்றாலே வெறியாட்டம் ஆடும் கோலி..! பிரமிக்க வைக்கும் கோலியின் ஜனவரி 15 வரலாறு

இதைத் தொடர்ந்து நடந்த அடுத்த போட்டியில் நெதர்லாந்து அணி 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதற்கு அடுத்த போட்டியில் பிரான்ஸ் அணியும், தென் ஆப்பிரிக்கா அணியும் மோதின. இதில், பிரான்ஸ் அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி வாகை சூடியது. இறுதியாக நடந்த அர்ஜெண்டினா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இரு அணிகளுமே தலா 3 கோல்கள் அடிக்க இறுதியாக போட்டி டிராவில் முடிந்தது.

SA20: அதிரடி காட்டிய கிளாசன்:எளிதில் வெற்றி பெற்ற டர்பன் சூப்பர் ஜெயிண்ட்ஸ்!

ஏ பிரிவில் உள்ள அணியில் ஆஸ்திரேலியா அணி 2 போட்டியில் விளையாடி ஒன்றில் மட்டும் வெற்றி பெற்றது. ஒரு போட்டி டிராவில் முடிந்துள்ளது. இதே போன்று அர்ஜெண்டினா அணியும் ஒன்றில் வெற்றி பெற்று, ஒரு போட்டி டிராவில் முடிந்துள்ளது. பிரான்ஸ் அணியும் 2 போட்டியில் விளையாடியுள்ளது. இதில் ஒன்றில் வெற்றி பெற்று ஒன்றில் தோல்வி அடைந்துள்ளது. தென் ஆப்பிரிக்கா அணி 2 போட்டியில் விளையாடி 2லும் தோல்வியை தழுவியுள்ளது. இந்தியா அணி 2 போட்டியில் விளையாடி ஒன்றில் வெற்றி பெற்றது. ஒரு போட்டி மட்டும் டிராவில் முடிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தாண்டை புதுவிதமாக வரவேற்ற கிங்: எண்ணற்ற சாதனைகளுக்கு சொந்தக்காரரான விராட் கோலி!

ஒரு நாள் போட்டியில் சாதித்து காட்டிய இந்தியா! 317 ரன்கள் வித்தியாசம் - இதுவே முதல் முறை!

click me!