ஜோர்டானில் நடைபெற்ற உலக ஜூனியர் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய பெண்கள் மல்யுத்த அணி சாம்பியன் பட்டம் வென்றது.
ஜோர்டானில் உலக ஜூனியர் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி நடந்து வருகிறது. இதில், நேற்று நடந்த போட்டியில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா யெஃப்ரெமோவாவை 4-0 என்ற கணக்கில் வீழ்த்தி அண்டர்20 உலக சாம்பியன்ஷிப் பட்டத்தைத் தட்டிச் சென்ற முதல் இந்திய பெண்மணி என்ற வரலாறு படைத்தார். மற்றொரு வீராங்கனையான சவிதாவும் 62 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்றார். இந்திய பெண்கள் அணி அவர்களின் மல்யுத்த வரலாற்றில் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் முறையாக அணி பட்டத்தை வென்றது.
ஃபர்ஸ்ட் போட்டியில் வெற்றி; 2ஆவது போட்டிக்கு தயாராகும் டீம் இந்தியா!
நேற்று முன் தினம் நடந்த போட்டியில் 76 கிலோ எடைப்பிரிவில் வெற்றி பெற்ற பிரியா மாலிக்கின் உத்வேகத்தை ஆண்டிம் பங்கால் மற்றும் சவிதாவும் பெற்றனர். இந்த போட்டியில் கலந்து கொண்ட 7 இந்திய மல்யுத்த வீர்ரகளில் பிரியா மாலிக், ஆண்டிம் பங்கால் மற்றும் சவிதா ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றனர். ஆண்டின் குண்டு 65 கிலோ எடைப்பிரிவில் ஒரு வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார். ரீனா, அர்ஜூ மற்றும் ஹர்ஷிதா ஆகியோர் 3 வெண்கலப் பதக்கங்களை கைப்பற்றினர்.
Farmer Dhoni: ஏன் விவசாயியாக ஆனேன்? உண்மையை உடைத்த எம்.எஸ்.தோனி!