பாரீஸ் முதல் டோக்கியோ ஒலிம்பிக் வரை சென்ற வீரர்களுக்கு மேற்கு வங்க அரசு நிதியுதவி வழங்கவில்லை - அமித் மால்வியா

By Rsiva kumar  |  First Published Jul 16, 2024, 2:49 PM IST

பாரீஸ் முதல் டோக்கியோ ஒலிம்பிக் வரையில் வெற்றி வாகை சூடிய மேற்கு வங்க விளையாட்டு வீரர்களுக்கு அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி நிதியுதவி அளிக்க தவறிவிட்டதாக பாஜக தேசிய தகவல் மற்றும் தொழில்நுட்ப துறை பொறுப்பாளர் அமித் மால்வியா பகிரங்மாக குற்றம்சாட்டியுள்ளார்.


பாரீஸில் 3ஆவது முறையாக 2024 ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் நடைபெற இருக்கிறது. வரும் 26 ஆம் தேதி தொடங்கும் ஒலிம்பிக் 2024 விளையாட்டு போட்டியில் இந்தியா சார்பில் 113 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். வில்வித்தை, தடகளம், பேட்மிண்டன், குத்துச்சண்டை, குதிரையேற்றம், ஹாக்கி, கோல்ஃப், ஜூடோ, ரோயிங், படகு போட்டி உள்பட 16 பிரிவுகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.

தனிப்பட்ட காரணம் தொடர்பாக இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து பாண்டியா விலகல்!

Tap to resize

Latest Videos

இந்த நிலையில் தான், பாரீஸ் முதல் டோக்கியோ ஒலிம்பிக் வரையில் வெற்றி வாகை சூடிய மேற்கு வங்க விளையாட்டு வீரர்களுக்கு அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி நிதியுதவி அளிக்க தவறிவிட்டதாக பாஜக தேசிய தகவல் மற்றும் தொழில்நுட்ப துறை பொறுப்பாளர் அமித் மால்வியா பகிரங்மாக குற்றம்சாட்டியுள்ளார்.

 

பாரீஸ் முதல் டோக்கியோ ஒலிம்பிக் வரை வெற்றி பெற்ற மேற்குவங்க விளையாட்டு வீரர்களுக்கு நிதி உதவு செய்ய முதல்வர் மம்தா பானர்ஜி தவறிவிட்டார் என்று பாஜக தேசிய தகவல் மற்றும் தொழில்நுட்ப பொறுப்பாளர் பதிவிட்டுள்ளார். …

— Asianetnews Tamil (@AsianetNewsTM)

 

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:

அதானு தாஸ், பாராநகரைச் சேர்ந்த வில்வித்தை வீரர்.

பிரணதி நாயக், ஜார்கிராமைச் சேர்ந்த ஜிம்னாஸ்டிக் வீராங்கனை

சுதிர்தா முகர்ஜி, நைஹாட்டியைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீராங்கனை

அனிர்பன் லஹிரி, குடியுரிமை பெறாத பெங்காலி கோல்ப் வீரர்

அபா கதுவா, மேதினிபூரைச் சேர்ந்த ஷாட் புட் வீராங்கனை

அனுஷ் அகர்வாலா, கொல்கத்தாவைச் சேர்ந்த குதிரையேற்ற வீரர்

அங்கிதா பகத், கொல்கத்தாவைச் சேர்ந்த வில்வித்தை வீராங்கனை.

இவர்கள் யார் என்று உங்களுக்கு தெரியுமா?

இவர்கள் அனைவரும் பாரீஸ் முதல் டோக்கியோ ஒலிம்பிக் வரையில் உலகளவில் நாட்டை பெருமைப்படுத்திய மேற்கு வங்கத்தின் மகன்கள், மகள்கள். நமது நாட்டிற்கும் பெங்காலி சமூகத்திற்கும் பெருமையை கொண்டு வந்தவர்கள். அப்படிப்பட்ட புகழ்பெற்ற ரத்தினங்கள், மேற்கு வங்க மாநில அரசின் தவறான நிர்வாகம் மற்று ஊழல் காரணமாக நிதியுதவியை இழந்துவிட்டன. விளையாட்டு வீரர்களின் வெற்றிகளை கொண்டாடுவதற்கு பதிலாக அரசியல் அபிலாஷைகளுக்கு சேவை செய்யவே அரசு நிதியை கொட்டுகிறது. இதன் காரணமாக இந்த விளையாட்டு வீரர்கள் மற்ற மாநிலங்களிலிருந்து நிதி உதவி மற்றும் ஸ்பான்சர்ஷிப்பை பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Paris 2024 Olympics: பாரீஸ் 2024 ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற வீரர், வீராங்கனைகளின் முழு லிஸ்ட்!

நாம் இழந்த மேற்கு வங்கத்தின் மகத்துவத்தை மீட்டெடுக்கவும், விளையாட்டு வீரர்களுக்கான அங்கீகாரத்தை பெற்றுக் கொடுக்கவும், இந்த ஊழல் மற்றும் திறமையற்ற ஆட்சிக்கு எதிராகவும் குரல் கொடுக்க நாம் அனைவரும் எழுவது இன்றிமையாதது என்று கூறியுள்ளார். ஒலிம்பிக்கில் இடம் பெற்ற விளையாட்டு வீரர்களின் பயிற்சிக்கு மத்திய அரசு ரூ.470 கோடி நிதியுதவி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Paris 2024 Olympics: இந்திய விளையாட்டு வீரர்களுக்கு ரூ.470 கோடி நிதியுதவி; தடகளத்துக்கு மட்டும் ரூ.96.08 கோடி!

 

Atanu Das, an Archer from Baranagar
Pranati Nayak, an Artistic Gymnast from Jhargram
Sutirtha Mukherjee, a Table Tennis player from Naihati
Anirban Lahiri, a non-resident Bengali Golfer
Abha Khatua, Shot Putter from Medinipur
Anush Agarwalla, Equestrian from Kolkata
Ankita…

— Amit Malviya (@amitmalviya)

 

click me!