ரோஜர் ஃபெட்ரரை வீழ்த்தி தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.அலெக்சாண்டர் ஸ்வெரேவ்…

First Published Aug 15, 2017, 10:51 AM IST
Highlights
Alexander Svevrev wounded Roger Federer


மான்ட்ரியால் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெட்ரரை வீழ்த்தி ஃபெடரரின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ்.

மான்ட்ரியால் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி கனடாவின் மான்ட்ரியால் நகரில் நடைபெற்றது.

இந்தப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், போட்டித் தரவரிசையில் 2-வது இடத்தில் இருந்த ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரருடன் மோதினார்.

இதில், 6-3, 6-4 என்ற நேர் செட்களில் ரோஜர் ஃபெடரரை தோற்கடித்தார் அலெக்சாண்டர்.

இதன்மூலம் தொடர்ச்சியாக 10-வது வெற்றியைப் பெற்ற ஸ்வெரேவ், ரோஜர்
ஃபெடரரின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இதுதவிர தரவரிசையில் 7-வது இடத்துக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.

மான்ட்ரியால் மாஸ்டர்ஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இளம் வீரர் என்ற பெருமையையும் 20 வயதான ஸ்வெரேவ் தட்டிச் சென்றுள்ளார்.

வெற்றி குறித்து ஸ்வெரேவ் பேசியது:

“கடந்த வாரம் வாஷிங்டனில் பட்டம் வென்ற நிலையில், இப்போது மான்ட்ரியால் மாஸ்டர்ஸில் சாம்பியனாகியிருப்பது வியப்பாக இருக்கிறது.

எனது வாழ்வில் மிகச்சிறந்த டென்னிஸ் போட்டியை ஆடியதைப் போன்ற உணர்வு எனக்குள் ஏற்பட்டிருக்கிறது.

தற்போது தரவரிசையிலும் முதல் 10 இடங்களுக்குள் முன்னேறியிருக்கிறேன். இரு மாஸ்டர்ஸ் போட்டிகளில் வென்றிருப்பது ஒவ்வொரு வீரருக்குமே பெருமைப்படக்கூடிய விஷயமாகத்தான் இருக்கும்' என்றார்.

tags
click me!