
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரைக் கைப்பற்றி இலங்கையை ஒயிட் வாஷ் செய்தது இந்தியா.
இலங்கைக்கு எதிரான ஆட்டம் இலங்கையின் பல்லகெலேவில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 122.3 ஓவர்களில் 487 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
இந்திய அணியில் ஷிகர் தவன் 119 ஓட்டங்கள், ஹார்திக் பாண்டியா 108 ஓட்டங்கள், கே.எல்.ராகுல் 85 ஓட்டங்கள் எடுத்தனர்.
இலங்கைத் தரப்பில் சன்டாகன் 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.
பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணி 37.4 ஓவர்களில் 135 ஓட்டங்களுக்கு சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் தினேஷ் சன்டிமல் 48 ஓட்டங்கள் எடுத்தார்.
இந்தியத் தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 352 ஓட்டங்கள் முன்னிலை பெற்ற இந்தியா, இலங்கை அணிக்கு 'பாலோ-ஆன்' கொடுத்தது. அதைத் தொடர்ந்து 2-வது இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணி 2-வது நாள் ஆட்டநேர முடிவில் 13 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 19 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
மூன்றாவது நாளாக தொடர்ந்து ஆடிய இலங்கை அணியில் கருணாரத்னே 16 ஓட்டங்கள் எடுத்த நிலையில் அஸ்வின் பந்துவீச்சில் ரஹானேவிடம் கேட்ச் ஆனார்.
அவரைத் தொடர்ந்து புஷ்பகுமாரா 1 ஓட்டத்திலும், குஷல் மென்டிஸ் 12 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். இவர்கள் இருவரையும் முகமது சமி வீழ்த்தினார். இதனால் 39 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இலங்கை.
இதையடுத்து தினேஷ் சன்டிமலுடன் இணைந்தார் மேத்யூஸ். இலங்கை அணியை சரிவிலிருந்து மீட்கப் போராடிய இந்த ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 65 ஓட்டங்கள் சேர்த்தது. சன்டிமல் 36 ஓட்டங்கள் எடுத்த நிலையில் குல்தீப் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அதன்பிறகு இலங்கையின் சரிவு தவிர்க்க முடியாததானது.
மேத்யூஸ் 35 ஓட்டங்கள், தில்ருவான் பெரேரா 8 ஓட்டங்கள், சன்டாகன் 8 ஓட்டங்கள் என அடுத்தடுத்து வெளியேற, மறுமுனையில் வேகமாக ரன் சேர்த்த டிக்வெல்லா 52 பந்துகளில் 41 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
கடைசி விக்கெட்டாக லஹிரு குமாரா 10 ஓட்டங்களில் வெளியேற, இலங்கையின் 2-வது இன்னிங்ஸ் 74.3 ஓவர்களில் 181 ஓட்டங்களோடு முடிவுக்கு வந்தது.
இந்தியத் தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்டுகளையும், முகமது சமி 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
ஹார்திக் பாண்டியா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
தொடர் நாயகன் விருதை ஷிகர் தவன் தட்டிச் சென்றார்.
இந்த வெற்றியின்மூலம் இலங்கைக்கு எதிராக ஆடிய இந்திய் அணி, இலங்கையை ஒயிட்வாஷ் செய்து தொடரை முற்றிலுமாக கைப்பெற்றி அசத்தியது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.