rahane: ஓய்வறையில் உட்கார வரவில்லை; இந்திய அணியை வெளியேறக்கூறிய நடுவர்கள்: மனம்திறந்த ரஹானே

Published : Jun 02, 2022, 04:20 PM IST
rahane: ஓய்வறையில் உட்கார வரவில்லை; இந்திய அணியை வெளியேறக்கூறிய நடுவர்கள்:  மனம்திறந்த ரஹானே

சுருக்கம்

Ajinkya Rahane :ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரின்போது, இந்திய அணி வீரர் முகமது சிராஜ் இனவெறியுடன் பேசப்பட்டது குறித்த சம்பவத்தில் நடுவர்களும் இந்திய அணியை வெளியேறக்கூறியதற்கு ஓய்வறையில் உட்கார வரவில்லை, விளையாட வந்திருக்கிறோம் என்று இந்திய அணியி்ன் கேப்டனாக இருந்த ரஹானே பதிலடி தெரிவித்துள்ளார். 

ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரின்போது, இந்திய அணி வீரர் முகமது சிராஜ் இனவெறியுடன் பேசப்பட்டது குறித்த சம்பவத்தில் நடுவர்களும் இந்திய அணியை வெளியேறக்கூறியதற்கு ஓய்வறையில் உட்கார வரவில்லை, விளையாட வந்திருக்கிறோம் என்று இந்திய அணியி்ன் கேப்டனாக இருந்த ரஹானே பதிலடி தெரிவித்துள்ளார். 

2020-21ம் ஆண்டு ஆஸ்திரேலியா சென்றிருந்த இந்திய அணி டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி நாடு திரும்பியது. இந்தத் தொடரில் முதல்டெஸ்ட் போட்டி முடிந்ததும் விராட் கோலி தாயகம் திரும்பிவிட்டார். அடுத்தடுத்த போட்டிகளுக்கு ரஹானேதான் கேப்டன்ஷிப் செய்தார்.

இதில் சிட்னியில் நடந்த டெஸ்ட் போட்டியில் 3-வது நாள் ஆட்டத்தின்போது இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் பவுண்டரி எல்லையில் பீல்டிங் செய்தபோது, ரசிகர்களால் இனவெறி வார்த்தைகளால் தாக்கப்பட்டார். அதுகுறித்து கேப்டன் ரஹானேவிடம் சிராஜ் புகார் செய்தார். அதன்பின் 4-வது நாள் ஆட்டத்திலும் இந்திய அணியினர் பீல்டிங் செய்தபோது இதுபோன்றசம்பவம் நடந்ததால் ஆட்டத்தை 10 நிமிடங்கள் நிறுத்தினர்.

இந்த சம்பவம் குறித்து ரஹானே விரிவாக மனம்திறந்து கிரிக்இன்போ தளத்தில் பேசியுள்ளார். அவர் கூறியதாவது:

சிட்னி டெஸ்டின் 4-வது நாளின்போது, ரசிகர்கள் சிலர் மீண்டும் இனவெறி வார்த்தைகளால் பேசுவதாக சிராஜ் என்னிடம் வந்து தெரிவித்தார். உடனே நடுவர்களாக இருந்த பால் ரீபில், பால் வில்சன் ஆகியோரிடம் சென்று நடந்ததை தெரிவித்தேன். உடனடியாக நடவடிக்கை எடுங்கள் என்றேன். இல்லாவிட்டால் எங்களால் விளையாடமுடியாது என்றேன். 

அதற்கு நடுவர்கள், என்னிடம், உங்களால் போட்டியை நிறுத்த முடியாது. நீங்கள் விரும்பினால், மைதானத்திலிருந்து வெளியேறலாம் என்றனர். அதற்கு நாங்கள், நாங்கள் ஓய்வறையில் உட்கார்வதற்காக வரவில்லை. தவறாகப் பேசும் பார்வையாளர்களை மைதானத்திலிருந்து வெளியே அனுப்ப வேண்டும் என்றோம்.

இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் அனைத்து வீரர்களும் எங்களுக்கு ஆதரவாக இருந்தார்கள். சிட்னியில் நடந்த சம்பவங்கள் அனைத்துமே தவறானது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியமும் விசாரணை நடத்தி, ஆம் உண்மையிலேயே இந்திய வீரர்கள் சிலர் இனவெறியுடன் பேசப்பட்டுள்ளார்கள் என உறுதி செய்தது. “ இவ்வாறு ரஹானே தெரிவித்தார்.

இந்திய அணியில் இடம் பெற்றிருந்த அஸ்வின் கூறுகையில் “  ஒரு குறிப்பிட்ட நாட்டிலும், குறிப்பிட்ட பிரிவு மக்களுக்கும் இதில் தொடர்பில்லை என நான் நினைக்கவில்லை. எல்லா இடங்களிலும ்மக்கள் தாங்கள் பெரும்பான்மையான பிரிவைச் சேர்ந்தவர்களாகவே நம்புகிறார்கள். அந்த வழியிலேயே செல்கிறார்கள். அதில் இனவெறி என்பதுஒரு முனைதான். சிலரை வேறுபடுத்திக்காட்டவே மக்கள் அதைப் பயன்படுத்துகிறார்கள்.இதற்கு சிறந்த தீர்வு என்பது விழிப்புணர்வும், நல்ல பெற்றோரின் வளர்ப்பும்தான்

சிட்னியில் சிராஜுக்கு இதுபோன்று நடந்தபோது, அதை அவர் துணிச்சலுடன் வெளிக்கொண்டு வந்து, அனைத்து மக்களும் அறியுமாறு செய்தார். ஆஸி. ரசிகர்கள் செய்தது கண்டிக்கப்பட வேண்டியது. எல்லா இடங்களிலும் மக்களை வெவ்வேறு விதமாக வேறுபடுத்துவது சரியல்ல” எனத் தெரிவித்தார்
 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA 1st T20: கம்பேக் மேட்ச்சில் காட்டடி அடித்த ஹர்திக் பாண்ட்யா.. SA-க்கு சவாலான இலக்கு!
IND vs SA 1st T20: இந்தியா பேட்டிங்..! சஞ்சு சாம்சன், நம்பர் 1 ஸ்பின்னர் நீக்கம்! பிளேயிங் லெவன்!