
ஐபிஎல் 15வது சீசன் வெற்றிகரமாக முடிந்த நிலையில், அடுத்ததாக இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக டி20 தொடரில் ஆடுகிறது. தென்னாப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது.
ஜூன் 9 முதல் 19 வரை டி20 தொடர் நடக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. ரோஹித், கோலி, பும்ரா ஆகிய சீனியர் வீரர்களுக்கு இந்த தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
அதனால் கேஎல் ராகுல் தலைமையில் இந்திய அணி களமிறங்குகிறது. இந்த தொடருக்கான இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா கம்பேக் கொடுத்துள்ளார். ஆல்ரவுண்டரும் மேட்ச் வின்னருமான ஹர்திக் பாண்டியாவின் கம்பேக் இந்திய அணிக்கு வலுசேர்க்கும்.
இந்த தொடருக்கான இந்திய அணியில், ஐபிஎல்லில் அசத்திய ஃபாஸ்ட் பவுலர் உம்ரான் மாலிக் இடம்பெற்றுள்ளார். இந்த தொடருக்கான இந்திய அணியின் வலுவான ஆடும் லெவனை பார்ப்போம்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியின் வலுவான ஆடும் லெவன்:
கேஎல் ராகுல் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயாஸ் ஐயர், தீபக் ஹூடா, ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஹர்ஷல் படேல், புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல், ரவி பிஷ்னோய், உம்ரான் மாலிக்.