SL vs AUS: ஐபிஎல்லில் அசத்திய 2 வீரர்கள் இலங்கை டி20 அணியில் கம்பேக்..! டி20 அணி அறிவிப்பு

Published : Jun 01, 2022, 08:22 PM IST
SL vs AUS: ஐபிஎல்லில் அசத்திய 2 வீரர்கள் இலங்கை டி20 அணியில் கம்பேக்..! டி20 அணி அறிவிப்பு

சுருக்கம்

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.  

ஆஸ்திரேலிய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 5 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. ஜூன் 7, 8 மற்றும் 11 ஆகிய தேதிகளில் 3 டி20போட்டிகள் நடக்கின்றன.

இந்த டி20 தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தசுன் ஷனாகா தலைமையிலான இலங்கை அணியில் ஐபிஎல்லில் அபாரமாக விளையாடிய வனிந்து ஹசரங்கா மற்றும் பானுகா ராஜபக்சா ஆகிய இருவரும் கம்பேக் கொடுத்துள்ளனர்.

கடைசியாக இலங்கை அணி இந்தியாவிற்கு எதிராக ஆடிய தொடரில் இவர்கள் பங்கேற்கவில்லை. ஹசரங்கா கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் ஆடவில்லை. ராஜபக்சா ஃபிட்னெஸ் பிரச்னையால் ஆடவில்லை. சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்த ராஜபக்சா, பின்னர் இலங்கை கிரிக்கெட் வாரியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி ஓய்வு முடிவை வாபஸ் பெற்றார்.

ஹசரங்கா ஐபிஎல்லில் ஆர்சிபி அணிக்காக அபாரமாக பந்துவீசி 26 விக்கெட்டுகளை வீழ்த்தி, இந்த சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய 2வது பவுலராக சீசனை முடித்தார். ராஜபக்சாவும் ஐபிஎல்லில் நன்றாக ஆடினார். பஞ்சாப்கிங்ஸ் அணிக்காக 9 இன்னிங்ஸ்களில் 206 ரன்கள் அடித்தார்.

ஐபிஎல்லில் நன்றாக ஆடிய ஹசரங்கா மற்றும் ராஜபக்சா ஆகிய இருவரும் அணியில் எடுக்கப்பட்டுள்ளனர்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 தொடருக்கான இலங்கை அணி:

தசுன் ஷனாகா (கேப்டன்), பதும் நிசாங்கா, தனுஷ்கா குணதிலகா, குசால் மெண்டிஸ், சாரித் அசலங்கா, பானுகா ராஜபக்சா, நுவனிது ஃபெர்னாண்டோ, லஹிரு மதுஷன்கா, வனிந்து ஹசரங்கா, சாமிகா கருணரத்னே, துஷ்மந்தா சமீரா, கசுன் ரஜிதா, நுவான் துஷாரா, மதீஷா பதிரானா, ரமேஷ் மெண்டிஸ், மஹீஷ் தீக்‌ஷனா, பிரவீன் ஜெயவிக்ரமா, லக்‌ஷன் சந்தாகன்.
 

PREV
click me!

Recommended Stories

யார்க்கர் மன்னன் ஜஸ்பிரித் பும்ரா வரலாற்று சாதனை..! மற்ற பவுலர்கள் நினைச்சு கூட பார்க்க முடியாது!
IND VS SA 1st T20: தென்னாப்பிரிக்காவை வெறும் 74 ரன்னில் சுருட்டி வீசிய இந்தியா.. மெகா வெற்றி!