
பிசிசிஐ தலைவராக தலைவராக 2019ம் ஆண்டு பொறுப்பேற்ற கங்குலி, சுமார் 3 ஆண்டுகளாக மிகச்சிறப்பாக செயல்பட்டார். இந்தியாவில் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியை கொல்கத்தா ஈடன் கார்டனில் நடத்தி அசத்தினார்.
அதன்பின்னர், இந்திய அணியின் புதிய பயிற்சியாளர்களை நியமித்தது, தேசிய கிரிக்கெட் அகாடமியின் நிர்வாகத்தை சிறப்பாக நடத்தியது என நிர்வாக ரீதியில் சிறப்பாக செயல்பட்டுவருகிறார்.
இந்நிலையில், இன்று அவர் பதிவிட்ட டுவீட், பிசிசிஐ தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறாரா என்ற சந்தேகத்தை எழுப்பியது. 1992லிருந்து கிரிக்கெட் எனக்கு நிறைய கொடுத்திருக்கிறது. இந்த பயணம் மிகச்சிறப்பானது. அனைவரும் அளித்த ஆதரவுக்கும் அன்புக்கும் நன்றி. இதே ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறேன். எனது வாழ்வில் புதிய அத்தியாயத்தை தொடங்குகிறேன் என்று பதிவிட்டார் கங்குலி.
அதனால் அவர் பிசிசிஐ தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறாரா என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, கங்குலி பிசிசிஐ தலைவர் பதவியிலிருந்து விலகவில்லை என்று தெரிவித்துள்ளார்.