
டி20 உலக கோப்பை வரும் அக்டோபர் - நவம்பரில் ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ளது. இந்த தொடருக்காக இந்திய அணி தீவிரமாக தயாராகிவருகிறது. டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடிக்க வீரர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.
எனவே இந்திய அணி தேர்வு மிகக்கடினமாக இருக்கும். டாப் ஆர்டரில் ரோஹித், ராகுல், 3ம் வரிசையில் விராட் கோலி, 4ம் வரிசையில் சூர்யகுமார் யாதவ்/ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் பேட்டிங் ஆடுவது உறுதி.
ஐபிஎல்லில் அபாரமாக விளையாடி இந்திய டி20 அணியில் ஹர்திக் பாண்டியா மீண்டும் இடம்பிடித்துள்ள நிலையில், இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் குறித்து சுனில் கவாஸ்கர் கருத்து கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய கவாஸ்கர், ஹர்திக் பாண்டியா 5ம் வரிசையிலும், ரிஷப் பண்ட் 6ம் வரிசையிலும் இறங்கினால் நினைத்து பாருங்கள். இந்த 2 வரிசைகளில் இவர்கள் இருவரும் மாறி மாறி கூட இறக்கப்படலாம். ஆக மொத்தத்தில் 5-6ம் வரிசைகளில் பாண்டியாவும் ரிஷப்பும் இறங்கினால், 14-20 ஓவர்களில் 100-120 ரன்களை எதிர்பார்க்கலாம். இவர்கள் இருவரும் டெத் ஓவர்களில் ஆடுவதை பார்க்கத்தான் காத்திருக்கிறேன் என்றார் கவாஸ்கர்.