சென்னையில் ஹாட்ரிக் தோல்வி – ஆறுதல் வெற்றிக்காக காத்திருக்கும் தமிழ் தலைவாஸ்!

சென்னையில் நடந்த புரோ கபடி லீக் தொடரில் தமிழ் தலைவாஸ் விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வி அடைந்து ஆறுதல் வெற்றிக்காக காத்துக் கொண்டிருக்கிறது.


கடந்த 2ஆம் தேதி முதல் 10ஆவது சீசனுக்கான புரோ கபடி லீக் தொடர் நடந்து வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு காளைகள், தபாங் டெல்லி, குஜராத் ஜெயிண்ட்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்தான், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா, யுபி யோதாஸ் என்று 12 அணிகள் இடம் பெற்றுள்ளன.

500 விக்கெட்டுகள் கைப்பற்ற காத்திருக்கும் அஸ்வின், பிளேயிங் 11ல் இடம் பெறுவாரா?

Latest Videos

அகமதாபாத், பெங்களூரு, புனே ஆகிய பகுதிகளில் போட்டிகள் நடத்தப்பட்ட நிலையில் தற்போது சென்னையில் நடக்கிறது. இங்கு மட்டும் 6 நாட்கள் போட்டிகள் நடத்தப்படுகிறது. வரும் 28ஆம் தேதி போட்டி முடியும் நிலையில் அடுத்ததாக நொய்டா, மும்பை, ஜெய்பூர், ஹைதராபாத், பாட்னா, டெல்லி, கொல்கத்தா, பஞ்ச்குலா ஆகிய பகுதிகளில் போட்டி நடக்கிறது.

இதுவரையில் தமிழ் தலைவாஸ் விளையாடிய 6 போட்டிகளில் 2ல் மட்டுமே வெற்றி பெற்று 4ல் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் 11ஆவது இடம் பிடித்திருந்தது. இதில் 2 தோல்வி சென்னையில் நடந்த ஹோம் மைதான போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று சென்னையில் நடந்த புரோ கபடி லீக் தொடரின் 40ஆவது போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் மற்றும் தாபங் டெல்லி அணிகள் மோதின.

அசாருதீன், சச்சின், கங்குலி, டிராவிட், தோனி, கோலி யாரும் படைக்காத சாதனையை படைக்க ரோகித்துக்கு கிடைத்த வாய்ப்பு

இதில், தாபங் டெல்லி அணியானது 38 – 29 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியைத் தொடர்ந்து தமிழ் தலைவாஸ் அணியானது தனது ஹோம் மைதானத்தில் 3 ஆவது போட்டியில் களமிறங்கியது. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்தப் போட்டியிலும் தோல்வி அடைந்து ஹாட்ரிக் தோல்வியை தழுவியது.

தமிழ் தலைவாஸ் மற்றும் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் 41ஆவது போட்டியில் மோதின. இதில், ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியானது 42 – 29 என்ற புள்ளிகணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலமாக சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடந்த 3ஆவது போட்டியிலும் தமிழ் தலைவாஸ் அணி தோல்வி அடைந்து ஹாட்ரிக் தோல்வியை தழுவியது.

ஹரியானாவை ஒன்னுமே செய்ய முடியல – எவ்வளவு போராடியும் தமிழ் தலைவாஸ் அணிக்கு தோல்வி தான் மிச்சம்!

இதையடுத்து நாளை 27ஆம் தேதி சென்னையில் நடக்கும் கடைசி போட்டியில் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

டிசம்பர் 22 – மேட்ச் 34: தமிழ் தலைவாஸ் 33 – பாட்னா பைரேட்ஸ் 46 – தோல்வி

டிசம்பர் 23 – மேட்ச் 36: தமிழ் தலைவாஸ் 24 – ஜெய்பூர் பிங்க் பாந்தர்ஸ் 25 – தோல்வி

டிசம்பர் 25: மேட்ச் 41: தமிழ் தலைவாஸ் 29 – ஹரியானா ஸ்டீலர்ஸ் 42 - தோல்வி

click me!