
ஆசியாவின் சிறந்த தடகள சம்மேளனமாக இந்திய தடகள கூட்டமைப்பு தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆசிய தடகளத்தின் 50வது ஆண்டு கொண்டாட்டங்களை நினைவுகூரும் வகையில், பாங்காக்கில் நடந்த ஒரு மிளிரும் விழாவில், இந்தியாவின் சார்பில், ஒலிம்பியன் மற்றும் அர்ஜுனா விருது பெற்ற, இந்திய தடகளத் தலைவர் டாக்டர் அடில்லே ஜே சுமாரிவாலா விருது பெற்றார். நம் நாட்டின் விளையாட்டு சகோதரத்துவத்திற்கு மட்டுமல்ல, பெருமைமிக்க மற்றும் முற்போக்கான இந்தியாவுக்கே உண்மையிலேயே பெருமையான தருணம்.
இந்தியாவின் நம்பிக்கைக்குரிய மும்முறை தாண்டுதல் வீரர் செல்வ பிரபு இந்த ஆண்டின் சிறந்த ஆசிய U20 ஆண் தடகள வீரர் ஆவார். ஆசிய தடகள சங்கத்தின் விருதை இன்று பாங்காக்கில் அவர் பெற்றார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.