இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் மூலமாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான இஷாந்த் சர்மா வர்ணனையாளராக அறிமுகமாக உள்ளார்.
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அங்கு 2 டெஸ்ட், 3 ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 12 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரையில் டொமினிகா மைதானத்தில் நடக்கிறது. இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது.
5ஆவது பவுலராக யாருக்கு வாய்ப்பு? முகேஷ் குமார், நவ்தீப் சைனி, ஜெயதேவ் உனத்கட் கடும் போட்டி!
இந்திய டெஸ்ட் அணி:
ரோகித் சர்மா (கேப்டன்), அஜின்க்யா ரஹானே (துணை கேப்டன்), கே எஸ் பரத் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஜெயதேவ் உனத்கட், நவ்தீப் சைனி.
லதா மங்கேஷ்கர் பாடிய சலாம்-இ-இஷ்க் என்ற பாடலை பாடும் தோனி: வைரலாகும் வீடியோ!
வெஸ்ட் இண்டீஸ் முதல் டெஸ்ட் அணி:
கிரேக் பிராத்வைட் (கேப்டன்), ஜெர்மைன் பிளாக்வுட் (துணை கேப்டன்), அலிக் அதானாஸ், டேகனரைன் சந்தர்பால், ரஹ்கீம் கார்ன்வால், ஜோசுவா டா சில்வா, ஷானன் கேப்ரியல், ஜேசன் ஹோல்டர், அல்ஸாரி ஜோசப், கிர்க் மெக்கன்சிஃப், கெமர் ரோச், ஜோமெல் வாரிக்கன், ரேமன் ரைஃபர்
ஸ்காட்லாந்தை வீழ்த்திய நெதர்லாந்துக்கு பயம் காட்டிய இலங்கை: நமஸ்தே இந்தியா 2023!
இந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் தொடரின் மூலமாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான இஷாந்த் சர்மா கிரிக்கெட் வர்ணனையாளராக அறிமுகமாகவுள்ளார். கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் இந்திய அணியில் இடம் பெற்று இஷாந்த் சர்மா விளையாடி வருகிறார். இதுவரையில் 105 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 311 விக்கெட்டுகளும், 785 ரன்களும் எடுத்துள்ளார்.
பும்ரா வந்துட்டா ரோகித் சர்மா கேப்டன்சியில் இந்திய அணி உலகக் கோப்பை வெல்லும் – முகமது கைஃப்!
இதே போன்று 80 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி115 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். கடைசியாக கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் 25 ஆம் தேதி நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இடம் பெற்று விளையாடினார். அதன் பிறகு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணியில் இடம் பெற்று விளையாடினார். 8 போட்டிகளில் விளையாடி 10 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
இந்த நிலையில், தான் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான முதல் டெஸ்ட் போட்டியின் மூலமாக கிரிக்கெட் வர்ணனையாளராக அறிமுகமாக உள்ளார்.