உலக டெஸ்ட் தொடரை இழந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாட உள்ளது.
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி வரும் 12ஆம் தேதி டொமினிகாவில் நடக்க இருக்கிறது. டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. பேட்டிங் ஆர்டரைப் பொறுத்த வரையில் ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, அஜின்க்யா ரஹானே, கேஎஸ் பரத், ரவிச்சந்திரன் அஸ்வின் என்று வரிசை கட்டி இருக்கின்றனர். இதே போன்று பவுலிங்கைப் பொறுத்த வரையில், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஜெயதேட் உனத்கட், நவ்தீப் சைனி, ஷர்துல் தாக்கூர், ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் படேல் ஆகியோரும் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளனர்.
லதா மங்கேஷ்கர் பாடிய சலாம்-இ-இஷ்க் என்ற பாடலை பாடும் தோனி: வைரலாகும் வீடியோ!
டொமினிகா மைதானத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு கடைசியாக டெஸ்ட் போட்டி நடந்தது. இதில், வெஸ்ட் இண்டீஸ் மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில், பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் 11 விக்கெட்டுகளையும், சுழற்பந்து வீச்சாளர்கள் 9 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இவ்வளவு ஏன், இந்த மைதானத்தில் நடந்த 5 டெஸ்ட் போட்டிகளில் 4ல் வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வி அடைந்துள்ளது.
ஸ்காட்லாந்தை வீழ்த்திய நெதர்லாந்துக்கு பயம் காட்டிய இலங்கை: நமஸ்தே இந்தியா 2023!
இதன் காரணமாக சுழற்பந்து வீச்சாளர்களாக ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா அல்லது அக்ஷர் படேல் ஆகியோர் களமிறங்க வாய்ப்பிருக்கிறது. அதே போன்று வேகப்பந்து வீச்சாளர்களான முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர் ஆகியோர் களமிறங்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் தவிர ஜெயதேவ் உனத்கட் அல்லது முகேஷ் குமார் அல்லது நவ்தீப் சைனி ஆகியோரும் களமிறங்கவும் வாய்ப்பிருக்கிறது.
பும்ரா வந்துட்டா ரோகித் சர்மா கேப்டன்சியில் இந்திய அணி உலகக் கோப்பை வெல்லும் – முகமது கைஃப்!