
இந்திய அணியை விட தங்களிடம் சிறந்த ஸ்பின்னர்கள் இருப்பதாக ஆஃப்கானிஸ்தான் அணி கேப்டன் அஸ்கர் ஸ்டானிக்ஸாய் தெரிவித்துள்ளார்.
எல்லா காலக்கட்டத்திலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த அணியாக விளங்கும் இந்திய அணி, தற்போது டெஸ்ட் தர வரிசையில் முதலிடத்தில் உள்ளது. கோலி, புஜாரா, ரஹானே, முரளி விஜய் போன்ற தரமான பேட்ஸ்மேன்கள் மற்றும் அஸ்வின், ஜடேஜா ஆகிய உலகத்தரம் வாய்ந்த ஸ்பின்னர்கள், புவனேஷ்வர் குமார், பும்ரா ஆகிய மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் என உலகத்தரம் வாய்ந்த வீரர்களுடன் இந்திய அணி சிறந்த டெஸ்ட் அணியாக திகழ்கிறது.
இவ்வாறு டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த அணியான இந்திய அணியுடன், தங்களது முதல் டெஸ்ட் போட்டியை ஆஃப்கானிஸ்தான் அணி ஆடுகிறது. வரும் 14ம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தொடங்குகிறது.
ஸ்பின் பவுலிங்கை சிறப்பாக ஆடும் இந்திய பேட்ஸ்மேன்களை ஸ்பின்னர்களை வைத்தே வீழ்த்த ஆஃப்கானிஸ்தான் அணி திட்டமிட்டுள்ளது.
வரலாற்று சிறப்புமிக்க இந்த போட்டி தொடர்பாக பேசியுள்ள ஆஃப்கானிஸ்தான் அணி கேப்டன் அஸ்கர் ஸ்டானிக்ஸாய், ரஷீத் கான், முஜீபுர் ரஹ்மான், முகமது நபி போன்ற சிறந்த ஸ்பின்னர்கள் எங்களிடம் உள்ளனர். இளம் வீரர்களான இந்த ஸ்பின்னர்கள் தான் எங்கள் அணியின் சிறப்பு. சொல்லப்போனால், இந்திய அணியை விட எங்கள் அணியில்தான் சிறந்த ஸ்பின்னர்கள் இருக்கிறார்கள் என்பது எனது கருத்து என ஆஃப்கானிஸ்தான் கேப்டன் அஸ்கர் ஸ்டானிக்ஸாய் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.