இந்திய அணிக்காக ஆடிய பிரபலமான அப்பா - மகன் பட்டியல்!!

 
Published : Jun 09, 2018, 05:20 PM ISTUpdated : Sep 19, 2018, 02:30 AM IST
இந்திய அணிக்காக ஆடிய பிரபலமான அப்பா - மகன் பட்டியல்!!

சுருக்கம்

most popular father son combos in indian cricket

மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் இந்திய ஜூனியர் அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். சச்சின் மகன் என்பதால், அர்ஜூனின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. எதிர்காலத்தில் கண்டிப்பாக இந்திய அணியில் ஆடுவார். 

சச்சின் டெண்டுல்கரின் மகன் இந்திய ஜூனியர் அணியில் இடம்பெற்றிருக்கும் வேளையில், இந்திய அணியில் ஆடிய தந்தை - மகன் பற்றி பார்ப்போம். சச்சின் - அர்ஜூன் டெண்டுல்கருக்கு முன்னதாக 4 பிரபலமான தந்தை - மகன் ஜோடிகள் உள்ளனர்.

1. லாலா அமர்நாத் (தந்த) - சுரீந்தர் அமர்நாத், ஜோஹிந்தர் அமர்நாத் (மகன்கள்)

1933ம் ஆண்டு இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியை மும்பையில் ஆடியது. வரலாற்று சிறப்புமிக்க இந்த போட்டியில் இந்திய வீரர் லாலா அமர்நாத் சதமடித்தார். பேட்டிங், பவுலிங்கில் சிறந்து விளங்கிய ஆல்ரவுண்டரான லாலா அமர்நாத்திற்கு இரண்டு மகன்கள். ஒருவர் சுரீந்தர், மற்றொருவர் மோஹிந்தர்.

இருவருமே இந்திய அணியில் ஆடினர். அதிலும் சுரீந்தர், தந்தை லாலா அமர்நாத்தை போலவே முதல் போட்டியிலேயே சதமடித்து அசத்தினார். 

2. விஜய் மஞ்சரேக்கர் (தந்தை) - சஞ்சய் மஞ்சரேக்கர் (மகன்)

1950-60களில் இந்திய அணியில் ஆடியவர் விஜய் மஞ்சரேக்கர். இவரது மகன் சஞ்சய் மஞ்சரேக்கரும் இந்திய அணிக்காக ஆடினார். 1980-90களில் சஞ்சய் மஞ்சரேக்கர் இந்திய அணியில் ஆடினார். இவர் தற்போது கிரிக்கெட் போட்டிகளின் வர்ணனையாளராக இருந்துவருகிறார். 

3. சுனில் கவாஸ்கர் (தந்தை) - ரோஹன் கவாஸ்கர் (மகன்)

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் சுனில் கவாஸ்கரை அவ்வளவு எளிதாக கடந்து செல்ல முடியாது. சச்சின் டெண்டுல்கருக்கு முன்னதாக பெரும்பாலான சாதனைகள் கவாஸ்கரிடமே இருந்தன. டெஸ்ட் போட்டியில் 10000 ரன்களை கடந்த முதல் வீரர். அதிகமான டெஸ்ட் சதங்கள் என பல சாதனைகளை முதலில் நிகழ்த்தியவர். அதிகமான டெஸ்ட் சதங்களில் பின்னாளில் சச்சின் கவாஸ்கரை முந்தினார்.

இவரது மகன் ரோஹன் கவாஸ்கர், 2004ல் இந்திய அணிக்காக ஆடினார். ஆனால் தந்தை சுனிலை போல இவரால் சோபிக்க முடியவில்லை. 

4. ரோஜர் பின்னி (தந்தை) - ஸ்டூவர்ட் பின்னி (மகன்)

கபில் தேவ் தலைமையில் கோப்பையை வென்ற இந்திய அணியில் இருந்தவர். 1983 உலக கோப்பையை வென்றபோது, அந்த தொடரில் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்தியவர்.

இவரது மகன் ஸ்டூவர்ட் பின்னி இந்திய அணிக்காக ஆடியுள்ளார். தற்போது அணியில் நிரந்தர இடம் கிடைக்காமல் தவித்து வருகிறார். ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக ஆடிவருகிறார். 
 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

யார்க்கர் மன்னன் ஜஸ்பிரித் பும்ரா வரலாற்று சாதனை..! மற்ற பவுலர்கள் நினைச்சு கூட பார்க்க முடியாது!
IND VS SA 1st T20: தென்னாப்பிரிக்காவை வெறும் 74 ரன்னில் சுருட்டி வீசிய இந்தியா.. மெகா வெற்றி!