இந்திய அணியில் அர்ஜூன் டெண்டுல்கர்.. மௌனம் கலைத்த கங்குலி

 
Published : Jun 09, 2018, 03:34 PM ISTUpdated : Sep 19, 2018, 02:30 AM IST
இந்திய அணியில் அர்ஜூன் டெண்டுல்கர்.. மௌனம் கலைத்த கங்குலி

சுருக்கம்

ganguly opens up on selection of arjun tendulkar

மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர், இந்திய ஜூனியர் அணிக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார். 

கிரிக்கெட் ஜாம்பவானும் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரருமான சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் ஒரு ஆல்ரவுண்டர். இடது கை வேகப்பந்து மற்றும் இடது கை பேட்ஸ்மேனான அவர், இலங்கைக்கு எதிரான தொடரில் ஆடுவதற்கு இந்திய ஜூனியர் அணியில் இடம்பிடித்துள்ளார்.

சச்சினின் மகன் என்பதால், அர்ஜூன் டெண்டுல்கரின் மீதே அனைவரின் கவனமும் உள்ளது. இந்திய அணிக்காக ஆடும் முன்னரே அவர் மீதான எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளன. இந்நிலையில், அர்ஜூன் டெண்டுல்கரின் தேர்வு குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கேப்டன் கங்குலி, இந்திய ஜூனியர் அணிக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கும் அர்ஜூன் டெண்டுல்கருக்கு கிரிக்கெட்டில் சிறந்த எதிர்காலம் அமைய வாழ்த்துகிரேன். அவர் விளையாடி நான் பார்த்ததில்லை. சிறப்பாக ஆடுவார் என நம்புகிறேன் என கங்குலி தெரிவித்துள்ளார். 
 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

ஓய்வு முடிவை திரும்ப பெற்றார் வினேஷ் போகத்! 2028 ஒலிம்பிக்கில் களம் காண்பதாக அறிவிப்பு!
வைபவ் சூர்யவன்ஷி ருத்ரதாண்டவம்.. மின்னல் வேக சதம்.. 433 ரன்கள் குவிப்பு.. பிரமிக்க வைத்த இந்தியா!