
இலங்கை சுற்றுப்பயணத்தில் இந்தியாவின் 19 வயதுக்கு உட்பட்ட அணிக்கு சச்சின் மகன் அர்ஜூன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால் 19 வயதுக்கு உட்பட்ட ஜூனியர் அணிக்கு பயிற்சியாளராக இருக்கும் டிராவிட், அர்ஜூனுக்கு இந்த தொடரில் பயிற்சியளிக்க முடியாமல் போய்விட்டது.
அடுத்த மாதம் இந்திய ஜூனியர் அணி இலங்கைக்கு செல்கிறது. 4 நாட்கள் நடைபெறும் போட்டிகள் 2 மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் இந்திய ஜூனியர் அணியும் இலங்கை ஜூனியர் அணியும் மோதுகின்றன.
அதே சமயத்தில் இந்திய “ஏ” அணி இங்கிலாந்தில் நடக்கும் முத்தரப்பு தொடரில் ஆடுவதால், அந்த அணிக்கு பயிற்சியாளராக டிராவிட் செல்ல உள்ளார். அதனால் இந்திய ஜூனியர் அணிக்கு பயிற்சியளிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.
டிராவிட்டுக்கு பதிலாக இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் WV.ராமன், இந்திய ஜூனியர் அணிக்கு பயிற்சியாளராக செயல்பட உள்ளார். அதனால் சச்சினின் மகன் அர்ஜூனுக்கு டிராவிட் பயிற்சியளிக்க முடியாத நிலை உள்ளது.
எனினும் இந்திய ஜூனியர் அணியில் சச்சின் மகன் இடம்பெற்றுவிட்டதால், அடுத்தடுத்த தொடர்களில் டிராவிட் பயிற்சியளிப்பார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.