சர்வதேச கால்பந்து போட்டியில்  சீனதைபேவை வீழ்த்தி கென்யா அபார வெற்றி...

 
Published : Jun 09, 2018, 01:55 PM ISTUpdated : Sep 19, 2018, 02:30 AM IST
சர்வதேச கால்பந்து போட்டியில்  சீனதைபேவை வீழ்த்தி கென்யா அபார வெற்றி...

சுருக்கம்

Kenya victory over China thaibe defeat in international football match

கண்டங்களுக்கு இடையிலான சர்வதேச கால்பந்து போட்டியில்  சீனதைபேவை வீழ்த்தி கென்யா அபார வெற்றி பெற்றது.

கண்டங்களுக்கு இடையிலான சர்வதேச கால்பந்து தொடர் மும்பையில் நடந்து வருகிறது.  நான்கு அணிகள் பங்கேற்ற கண்டங்களுக்கு இடையிலான சர்வதேச கால்பந்து போட்டியில் நேற்றிரவு கடைசி லீக் ஆட்டம் நடந்தது.

இதில் கென்யா மற்றும் சீனதைபே மோதின. இதில் கென்யா அணி 4–0 என்ற கோல் கணக்கில் சீனதைபேயை வீழ்த்தியது. 

அந்த அணியில் ஒடியம்போ 52–வது நிமிடத்திலும், ஜாக்கின்ஸ் அதுடோ 55 மற்றும் 88–வது நிமிடத்திலும், ஒட்டியானோ 70–வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.

லீக் முடிவில் இந்தியா, கென்யா, நியூசிலாந்து ஆகிய அணிகள் தலா 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் சமநிலை வகித்தது. 

இதையடுத்து கோல் வித்தியாசம் அடிப்படையில் முதல் இரு இடங்களை பிடித்த இந்தியா, கென்யா அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இறுதி ஆட்டம் நாளை நடக்கிறது. 
 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

IND vs SA: அபிஷேக் சர்மா அதிரடியால் ஈசியாக சேஸ் செய்த இந்திய அணி! தொடரில் 2-1 என முன்னிலை!
ஒரே ஃபிரேம்ல ரெண்டு GOAT.. சச்சின் கையால் 'நம்பர் 10' ஜெர்சி வாங்கிய மெஸ்ஸி!