
ஆசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் ஜிஸ்னா மேத்யூ தங்கம் வென்று அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.
ஆசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பானின் ஜிபு நகரில் கடந்த வியாழக்கிழமை தொடங்கின.
இதில், 400 மீ ஓட்டத்தில் நடப்புச் சாம்பியன், இந்திய வீராங்கனை ஜிஸ்னா மேத்யூ 53.26 வினாடிகளில் கடந்து தங்கப்பதக்கம் வென்றார். இதில் இலங்கை வெள்ளியும், சீன தைபே வெண்கலமும் வென்றன.
பிடி. உஷா நடத்தும் பயிற்சி மைய மாணவியான ஜிஸ்னா ஏற்கெனவே சீனியர் ஆசிய தடகளப் போட்டியிலும் தொடர் ஓட்டம், 400 மீ ஓட்டத்தில் தங்கம், வெண்கலம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நீளம் தாண்டுதலில் எம்.ஸ்ரீசங்கர் 7.47 மீ தூரம் தாண்டி வெண்கலம் வென்றார்.
குண்டு எறிதலில் அஜய் பத்தோலியா வெள்ளியும், உயரம் தாண்டுதலில் அபிநய சுதாகர ஷெட்டி வெண்கலமும் வென்றனர்.
மேலும், 10000 மீ ஓட்டத்தில் கார்த்திக் குமார், 1500 மீ மகளிர் ஓட்டத்தில் துர்கா பிரமோத் ஆகியோரும் வெண்கலம் வென்றனர்.
இரண்டாவது நாள் முடிவில் 2 தங்கம், ஒரு வெள்ளி, 7 வெண்கலப் பதக்கங்களை இந்தியா வென்றிருந்தது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.