
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் இறுதிச் சுற்றுக்கு ஆஸ்திரியாவின் டொமினிக் தீம் தகுதி பெற்றுள்ளார்.
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரிஸ் ரோலண்ட் காரோஸ் மைதானத்தில் நடைபெற்று வருகின்றன.
ஏற்கெனவே மகளிர் இறுதிச் சுற்றுக்கு சிமோனா ஹலேப் - ஸ்லோன் ஸ்டீபன்ஸ் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.
இதனிடையே நேற்று ஆடவர் ஒற்றையர் அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டத்தில் ஆஸ்திரியாவின் டொமினிக் தீமும், இத்தாலியின் மார்கோ சென்சினாட்டோவும் மோதினர்.
விறுவிறுப்பாக நடைப்பெற்ற இந்த ஆட்டத்தில் டொமினிக் தீம் 7-5, 7-6, 6-1 என்ற நேர் செட்களில் மார்கோவை வீழ்த்தி முதன்முறையாக இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார்.
பிரெஞ்ச் ஓபனில் இறுதிக்கு முன்னேறிய மிகவும் இளம் வயது வீரர் என்ற சாதனையை தீம் செய்துள்ளார்.
ரபேல் நடால் - டெல் பெட்ரோ ஆகியோர் இடையே நடைபறும் அரையிறுதி ஆட்டத்தில் வெற்றி பெறுபவருடன் இறுதிச் சுற்றில் தீம் மோதுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.