சிறு வயதிலேயே சாதனைகளை வாரி குவிக்கும் ரஷீத் கான்

First Published Jun 4, 2018, 2:48 PM IST
Highlights
afghan all rounder rashid khan continues to shatter records


19 வயதே ஆன ஆஃப்கானிஸ்தான் ஆல்ரவுண்டர் ரஷீத் கான், பவுலிங்கில் சாதனைகளை குவித்து வருகிறார்.

கடந்த 2015ம் ஆண்டு அக்டோபர் மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்த ரஷீத் கானுக்கு தற்போது 19 வயதே ஆகிறது. அதற்குள்ளாக பவுலிங்கில் பல சாதனைகளை புரிந்துவிட்டார்.

ஐபிஎல் 11வது சீசனில் ஹைதராபாத் அணிக்காக ஆடிய ரஷீத் கான், தனது திறமையான மற்றும் நேர்த்தியான பவுலிங்கால் கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்த்து பாராட்டுகளை வாரி குவித்தார். 

வங்கதேசத்துக்கு எதிராக டேராடூனில் நேற்று நடந்த டி20 போட்டியில், ரஷீத் கான் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் குறைந்த டி20 போட்டிகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீரர் என்ற பெருமையை ரஷீத் கான் பெற்றுள்ளார். நேற்றைய போட்டி ரஷீத் கானுக்கு 31வது டி20 போட்டி. இலங்கை வீரர் மெண்டீஸ் 26 டி20 போட்டிகளில் 50 விக்கெட்டுகளை கைப்பற்றி முதலிடத்தில் உள்ளார்.

100 ஒருநாள் விக்கெட்டுகளை விரைவில் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை அண்மையில் நிகழ்த்தியிருந்தார் ரஷீத் கான். 44 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை ரஷீத் வீழ்த்தியுள்ளார். மேலும் மிகக்குறைந்த வயதில் 100 ஒருநாள் விக்கெட்டுகளை வீழ்த்தியதும் ரஷீத் தான். 

19 வயதிலேயே பவுலிங்கில் சாதனை மேல் சாதனை படைத்துவரும் ரஷீத், அவரது கிரிக்கெட் வாழ்வின் முடிவில் பல சாதனைகளுக்கு சொந்தக்காரராக இருப்பார் என்பதில் ஐயமில்லை. 
 

click me!