
தேசிய கால்பந்து அணி வீரர்களுக்கு உரிய மதிப்பும், மரியாதையும் கிடைக்க வேண்டும் என்று வீராட் கோலி வலியுறுத்தி உள்ளார்.
மும்பையில் இன்டர்கான்டினென்டல் கோப்பை போட்டி நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக திங்கள்கிழமை இந்தியா - கென்யா அணிகள் மோதுகின்றன. இது இந்திய கேப்டன் சுனில் சேத்ரியின் 100-வது ஆட்டமாகும்.
இந்த நிலையில் இந்திய கேப்டன் சுனில் சேத்ரியின், "இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகளை காண ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் கூடுகின்றனர். ஆனால், அதேநேரத்தில் கால்பந்து உள்பட இதர விளையாட்டுகளுக்கு போதிய ஆதரவு கிடைக்கவில்லை.
போட்டிகளை காண ரசிகர்கள் அதிகளவில் வர வேண்டும். இணையதளத்தில் அணியின் செயல்பாடுகளை கிண்டல், விமர்சனம் செய்வது மட்டுமே தமாஷான வேலையில்லை.
ஐரோப்பிய லீக் அணிகளுக்கு ஈடாக இல்லையென்றாலும், நமது அணி ஆடும்போது திரளாக வந்து உற்சாகமூட்ட வேண்டும்" என தனது சுட்டுரையில் விடியோ பதிவிட்டிருந்தார்.
இதற்கு விரோட் கோலி ஆதரவு தெரிவித்துள்ளார். அவர், "இந்திய மக்கள், அனைத்து விளையாட்டுகளுக்கும் சமமான ஆதரவை தர வேண்டும். அப்போதுதான் விளையாட்டில் வல்லரசாக முடியும்.
எனது நண்பர் சேத்ரியின் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கிறேன். இந்திய அணி ஆடும் போட்டிகளுக்கு ரசிகர்கள் திரளாகச் சென்று பார்வையிட்டு ஆதரவு தர வேண்டும்.
தேசிய கால்பந்து அணி வீரர்களுக்கு உரிய மதிப்பும், மரியாதையும் கிடைக்க வேண்டும்" என்று கோலி கேட்டுக்கொண்டார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.