
ஆசியக் கோப்பை மகளிர் டி 20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 142 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மலேசியாவுக்கு படுதோல்வி கொடுத்தது.
ஆசியக் கோப்பை மகளிர் டி 20 கிரிக்கெட் போட்டி கோலாலம்பூரில் நடைபெற்று வருகிறது. இதில், முதலில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது.
மூத்த வீராங்கனை மிதாலி ராஜ் 69 பந்துகளில் 97 ஓட்டங்களை குவித்தார். ஹர்மன்பிரீத் கௌர் 32 ஓட்டங்களை குவித்தார். 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு இந்தியா 169 ஓட்டங்களை எடுத்தது.
பின்னர், ஆடிய மலேசிய அணியில் 6 வீராங்கனைகள் ஓட்டங்கள் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். 12 ஓட்டங்கள் எடுத்த நிலையில் அந்த அணி 5 விக்கெட்டுகளை விரைவாக இழந்தது. 5 வீராங்கனைகள் மட்டுமே ஒற்றை இலக்க ஓட்டங்களை எடுத்தனர்.
இந்திய வீராங்கனை பூஜா வஸ்தராகர் 3 விக்கெட்டையும், அனுஜா பட்டேல், பூனம் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
மலேசிய அணி வெறும் 27 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.
இதன்மூலம் 142 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.